For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த முன்னாள் பிரான்ஸ் அமைச்சர்

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: ஆப்பிரிக்க நாடான கபான் தலைநகர் லிபர்வில்லில் இருந்து பாரீஸுக்கு கிளம்பிய விமானத்தில் இருந்த கர்ப்பிணிக்கு முன்னாள் பிரான்ஸ் அமைச்சர் பிலிப்பே தூஸ்த் பிளேசி பிரசவம் பார்த்துள்ளார்.

2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் பிலிப்பே தூஸ்த் பிளேசி. இதய நோய் மருத்துவராகவும் பணியாற்றியவர். முன்னதாக அவர் சுகாதாரம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது ஐ.நா.வுக்காக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

French ex-minister delivers baby girl on plane

அவர் ஆப்பிரிக்க நாடான கபோனின் தலைநகர் லிபர்வில்லில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு பாரீஸுக்கு ஏர் பிரான்ஸ் விமானம் மூலம் கிளம்பினார். விமானத்தில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு தண்ணீர் குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தில் மருத்துவர் யாராவது இருந்தால் பிரசவம் பார்க்க உதவுமாறு சிப்பந்திகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதை கேட்ட பிலிப்பே தானாக முன்வந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

தரையில் துண்டை விரித்து அந்த பெண்ணை படுக்க வைத்து பிரசவம் பார்த்தார். சுக பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. விமானம் அல்ஜீரியா வான்வெளியில் பறந்தபோது குழந்தை பிறந்தது.

விமானத்தில் போதிய மருந்துகள் இல்லாதபோதிலும் அந்த பெண் கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுத்தார். அவரின் துணிச்சலை பாராட்டுகிறேன் என்று பிலிப்பே தெரிவித்துள்ளார்.

English summary
Former French minister Philippe Douste-Blazy helped a woman deliver a baby on Air France flight to Paris.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X