For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானில் 40 கி.மீ உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை படைத்த கூகுள் நிர்வாகி!

Google Oneindia Tamil News

நியூ மெக்ஸிகோ: வானிலிருந்து கீழே குதிப்பதில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஆலன் யூஸ்டேஸ் என்பவர்.

இவர் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவராக இருக்கிறார். இவர்தான் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

நியூ மெக்சிகோவிலிருந்து ராட்சத பலூன் மூலம் பூமியிலிருந்து 41,419 கிலோமீட்டர் உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து மீண்டும் பூமிக்குத் திரும்பி, நியூ மெக்சிகோ நகருக்கு மேலே 40 கிலோமீட்டர் உயரத்திலிருந்து "ஸ்கைடைவ்" செய்து கீழே குதித்து பத்திரமாக தரையிறங்கி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2012ம் ஆண்டு, 'ஃபியர்லெஸ் ஃபெலிக்ஸ்' என்றழைக்கப்படும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல 'ஸ்கை ட்வைர்' ஃபெலிக்ஸ் பாம்கர்ட்னர், ஒலியின் வேகத்துக்கு இணையாக வானில், சுமார் 37 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்து சாதனை படைத்துள்ளார். தற்போது அந்த சாதனையை ஆலன் முறியடித்துள்ளார்.

41 வயதான பாம்கர்ட்னர் ஆஸ்திரிய ராணுவப் படையில் 'பாராட் ரூப்பராக' பணியாற்றியவர். விமானங்கள், பாராசூட்டுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களில் இருந்து இதுவரை 2,500க்கும் மேற்பட்ட தடவை இவர் குதித்து சாகசங்கள் நிகழத்தியிருக்கிறார்.

முன்னதாக ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படும் வளிமண்டலப் பகுதிக்கு, கிட்டத்தட்ட பூமியிலிருந்து 1,35,890 அடி உயரத்திற்கு ராட்சத பலூனில் பயணித்தார் ஆலன். இதற்கு முன்பு பாம்கர்ட்னர், 1 லட்சத்து 28 ஆயிரத்து 100 அடி உயரம் வரைதான் போயிருந்தார்.

அங்கு அரை மணி நேரம் இருந்து வளிமண்டலத்தின் சூழலை ரசித்து அனுபவித்த பின்னர் ஆலன் பூமியை நோக்கி கீழே வரத் தொடங்கினர். ஒலியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் கீழே வந்த அதன் பின்னர் சிறப்பு விண்வெளி உடை மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர் காப்பு சாதனங்களின் உதவியுடன் படு வேகமாக கீழ் நோக்கிய பயணத்தை மேற்கொண்டார். பூமியிலிருந்து 40 கிலோமீட்டர் உயரத்திற்கு வந்த பின்னர் அவர் பாராசூட் மூலம் கீழே வந்து சேர்ந்தார்.

பூமியில் தரையிறங்குவதற்கு முன்பு ப்ரீ பால் எனப்படும் பாராசூட் விரிக்கப்படாத நிலையில் படு வேகத்தில் 4.5 நிமிடங்கள் கீழ் நோக்கி வந்தார் ஆலன். அதன் பின்னர் அவர் பாராசூட் மூலம் கீழ் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். 15 நிமிடங்களில் தரையிறங்கினார்.

இதன் மூலம் இதுவரை நிகழ்த்தப்பட்ட அதிக உயரம் மற்றும் ஒலிக்கு இணையான வேகம் ஆகிய சாதனையை ஆலன் முறியடித்துள்ளார்.

பூமியை நோக்கி ஸ்கைடைவ் மூலம் கீழே வந்தபோது எடையே இல்லாதது போல உணர்ந்ததாக ஆலன் தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் ஆலன். இவர் ஸ்கைடைவர் மட்டுமல்ல, ஒரு பைலட்டும் கூட.

English summary
A skydiving Google executive is safely back on Earth after jumping out of a giant balloon floating in the stratosphere more than 25 miles (40 km) above New Mexico, a feat that broke the sound barrier and shattered a world altitude record. Alan Eustace, a senior vice president at the Mountain View, California-based company, was lifted up 135,890 feet (41,419 meters) by an enormous balloon shortly before dawn on Friday, the Paragon Space Development Corp said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X