For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அரசியலில் புதிய வரலாறு எழுத வரும் ஹிலரி க்ளிண்டன்!

By Shankar
Google Oneindia Tamil News

பிலடெல்ஃபியா(யு.எஸ்): ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதிபர் வேட்பாளராக ஹிலரி க்ளிண்டன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க அரசியலில் இதுவரையிலும் இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. முதன் முறையாக ஹிலரி க்ளிண்டன் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார்.

candidate

பெர்னி சான்டர்ஸின் முழு ஆதரவு

கட்சி விதிகளின் படி, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஹிலரிக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெலிகேட்ஸ்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. இறுதியாக பெர்னி சான்டர்ஸ் வந்து, தனக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெலிகேட்ஸ்கள் எண்ணிக்கை அனைத்தையும் ஹிலரியை தேர்ந்தெடுக்கும் வகையில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவித்தார்.

ஆக, ஒட்டு மொத்த டெலிகேட்ஸ்களின் ஆதரவுடன் ஹிலரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

candidate

துணை அதிபர் வேட்பாளர்

முன்னதாக வர்ஜினியா செனட்டர் டிம் கெய்ன்-ஐ துணை அதிபர் வேட்பாளராக ஹிலரி தேர்வு செய்திருந்தார். முக்கியத்துவம் வாய்ந்த வர்ஜினியா மாநில வெற்றிக்கு கெய்ன் உதவியாக இருப்பார் என்று கருதப்படுகிறது. மேலும் ஸ்பானிஷ் மொழியில் மிகவும் சரளமாகப் பேசக்கூடிய கெய்ன், லத்தீன் இன மக்களின் ஆதரவை தக்க வைக்கவும் உதவியாக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

துணை அதிபர் வேட்பாளராக டிம் கெய்ன்-ஐ தேர்வு செய்ததற்கு அதிபர் ஒபாமா, ஹிலரியை பாராட்டியுள்ளார். டிம் கெய்ன் வர்ஜினியாக கவர்னராகவும் பதவி வகித்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

candidate

ஹிலரி ஒரு ரோல் மாடல்

முதல் நாள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல் பெண்மணி மிஷல் ஒபாமா, ஹிலரியை வெகுவாகப் புகழ்ந்தார். ஹிலரியை தன் பிள்ளைகள் ரோல் மாடலாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் -ஐ பெயர் குறிப்பிடாமலேயே, அவருடைய அணுகுமுறையை கடுமையாக தாக்கிப் பேசினார்.

மிஷல் ஒபாமாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது என்று டொனால்ட் ட்ரம்ப் பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார். அதிபர் ஒபாமாவுடன் மிஷல் ஒபாமாவும் தேர்தல் களத்தில் ஹிலரிக்கு ஆதரவு திரட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

candidate

ஒட்டு மொத்த ஜனநாயகக் கட்சியும் ஹிலரியின் பின்னால் அணிவகுத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். எதிரணியில் ஜெப் புஷ், மிட் ராம்னி போன்ற ஜாம்பவான்களும், எதிர்த்து போட்டியிட்ட டெட் க்ரூஸ் போன்றவர்களும் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இன்னமும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஐம்பது மாநிலங்களிலும் தேர்தல் என்றாலும் கடும் போட்டி நிலவும் பத்து மாநிலங்கள்தான் அடுத்த அதிபர் ஹிலரியா அல்லது ட்ரம்பா என்று நிர்ணயிக்கப்போகிறது.

-இர தினகர்

English summary
Hillary Clinton has been announced as official candidate of Democratic Party at the national convention held in Philadelphia. This is the first time one of the two national political parties announced a women candidate as presidential candidate and created a new history in United States. In the Convention speech, Michele Obama hailed Hillary for character and temperament and expect her daughters to follow Hillary as role model. Earlier, Hillary chosen Virginia former governor and senator Tim Kaine as her Vice President candidate. President Obama praised Hillary's vice presidential choice and said Tim will make a great vice president.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X