For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாயா குடுப்பா.. வித்தியாசமாய் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய ஹில்லாரி

By Siva
Google Oneindia Tamil News

அயோவா: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ஹில்லாரி கிளிண்டன் அயோவாவில் உள்ள காபி கடையில் இருந்து தனது பிரச்சாரத்தை வித்தியாசமாக துவங்கியுள்ளார்.

2016ம் ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹில்லாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவர் தனது பிரச்சாரத்தை அயோவாவில் இருந்து துவங்கியுள்ளார். பிரச்சாரத்திற்கு செல்கையில் அவர் அயோவாவில் உள்ள லீ கிளெய்ரில் இருக்கும் ஜோன்ஸ் ஸ்ட்ரீட் ஜாவா ஹவுஸ் என்ற காபி கடைக்கு சென்றார். அங்கு அவர் சாய் மற்றும் தண்ணீரை ஆர்டர் செய்தார்.

Hillary Clinton spotted at Iowa coffee shop as she begins 2016 campaign

டீயை வாங்கிக் கொண்டு அவர் கடையில் இருந்தவர்களிடம் சென்று பேசினார். கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் ஹில்லாரிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதில் பலர் ஹில்லாரியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் ரெபக்கா பர்ன்ஸ் கூறுகையில்,

ஹில்லாரில் காலை 10.30 மணிக்கு இங்கு வந்தார். அவர் கடையில் இருந்த வாடிக்கையாளர்களுடன் அவர்கள் அமர்ந்திருந்த டேபிள்களுக்கே சென்று பேசினார். அவர் தலைக்கனம் இல்லாத பெண். அவர் எங்கள் கடைக்கு வந்தது பெருமையாக இருந்தது என்றார்.

English summary
Hillary Clinton has started her campaign in a different manner from a coffee shop in Iowa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X