For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானத்தில வீடு கட்டணும், சேர்ந்து வசிக்க... அப்போ சுவிட்சர்லாந்து போங்க!

Google Oneindia Tamil News

பெர்ன்: விண்வெளியில் வீடு கட்டி வாழ நினைப்பவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சுவிட்சர்லாந்தில் தங்கும் விடுதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அறைகள் விண்வெளி போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாவுக்குப் பெயர் போன ஸ்விட்சர்லாந்தில்தான் இந்த அருமையான அனுபவத்தை உருவாக்கியுள்ளனர். அங்குள்ள ஜுரிச் நகரில் உள்ளது கமெஹா க்ராண்ட் என்ற தங்கும் விடுதி. இந்த விடுதியானது 'விண்வெளி' என்ற பொருளில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜெர்மனைச் சேர்ந்த மைக்கேல் நஜ்ஜார் என்பவர் இந்த விடுதியை வடிவமைத்திருக்கிறார். இங்கு போனால் விண்வெளிக்கே போன உணர்வு உங்களுக்கு ஏற்படும்.

விண்வெளி வீரர்கள்...

விண்வெளி வீரர்கள்...

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அவ்வப்போது தங்களது இருப்பிடங்களை விண்வெளி வீரர்கள் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள். அதனைப் பார்க்கும் போது சிலருக்கு தாங்களும் இதேபோல், வாழ இயலுமா என்ற ஆசை ஏற்படுவது சகஜம்.

கமெஹா க்ராண்ட்...

கமெஹா க்ராண்ட்...

ஆனால், நிஜத்தில் அத்தகைய வாழ்க்கை எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை. எனவே, விண்வெளி வாழ்க்கையை பூமியில் உள்ள மனிதர்களும் அனுபவிக்கும் வகையில் இந்த கமெஹா க்ராண்ட் ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் மெத்தைகள்...

மிதக்கும் மெத்தைகள்...

இங்குள்ள அறைகளில் ஜீரோ புவியீர்ப்பு விசையில் மெத்தை அந்தரத்தில் மிதப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, ராக்கெட் என்ஜின்களில் இருக்கும் விளக்குகள் போலவும் மேற்கூரையிலும் சுற்றுச் சுவர்களிலும் விண்மீன் கூட்டங்கள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

விண்வெளிக் குப்பையும்

விண்வெளிக் குப்பையும்

படுக்கை அறையில் வீடியோ காட்சியும் உண்டு. அதில் விண்வெளியில் சுற்றி வரும் பல்வேறு குப்பைகளையும் தத்ரூபமாக காட்டுகின்றனர். மேலும் விண்வெளியில் உள்ள பல்வேறு அம்சங்களையும் அந்த வீடியோ காட்சி காட்டும். இதனால் விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ரோபோக்கள்...

ரோபோக்கள்...

இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்தும் ரோபோக்கள் ஆகும். கறுப்பு, வெள்ளை, சாம்பல் வண்ணங்கள் மட்டுமே இந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்கம் பாஸ்

வெல்கம் பாஸ்

மேலும் ஹோட்டலுக்குள் நுழையும்போது ஒரு பெண்ணின் குரல் உங்களை வரவேற்கும். ஸ்பேஸ் ஷிப்பில் நுழையும் அனுபவம் இதன் மூலம் கிடைக்கும்.

கட்டணம்...

கட்டணம்...

இந்த ஹோட்டல் அறையில் தங்க ஒரு நாள் இரவுக் கட்டணம் ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகும். "விண்வெளிக்கு"ப் போக விரும்புவோருக்கு இதெல்லாம் ஒரு கட்டணமே கிடையாது பாஸ்.!

Image Credit: Kameha Grand Zurich

English summary
A hotel in Zurich, Switzerland, has just unveiled a new suite kitted out to look like the inside of a space station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X