For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஸ்க்குலார் டிஸ்டிராபியால் "பார்பி" தோற்றத்தைப் பெற்ற அமெரிக்கப் பெண்

Google Oneindia Tamil News

நியூ யார்க்: மஸ்குலார் டிஸ்டிராபி நோயினால் பார்பி பொம்மை போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

அழகான முகம், அம்சமான உடற்கட்டு என குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்துள்ளது பார்பி பொம்மைகள். பார்மி பொம்மைகள் மீது கொண்ட ஆசையால், வெளிநாட்டில் சில பெண்கள் செயற்கையாக ஆபரேஷன் மூலம் பார்பி பொம்மைகள் போன்ற தோற்றத்தைப் பெற்று வருகின்றனர்.

ஆனால், அமெரிக்காவில் வாழும் இளம்பெண் ஒருவர் நோயின் தாக்கத்தால் பார்பி பொம்மை போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளார்.

தசை வளக்கேடு...

தசை வளக்கேடு...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார் ஆம்பர் குஸ்மேன் (28). இவர் தனது 18 வயதில் ‘தசை வளக்கேடு' (muscular dystrophy) என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.

உடலே பாரம்...

உடலே பாரம்...

இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தன் உடலே சுமையாகத் தோன்றும். இயல்பாக நடக்கும் போதே ஏகப்பட்ட எடையைத் தூக்கி சுமந்து கொண்டு செல்வது போல இருக்கும்.

சாப்பிட முடியாது...

சாப்பிட முடியாது...

மேலும், இந்த நோயால் கை, கால்கள் வலுவிழந்து நடக்கக் கூட இன்னொருவரது துணையைத் தேட வேண்டி வரும். நீண்ட தூரம் நடக்கவோ, நிற்கவோ அல்லது உட்காரவோ முடியாத நிலை ஏற்படும். நினைத்தபடி உணவும் உட்கொள்ள இயலாது.

நோயின் தீவிரம்...

நோயின் தீவிரம்...

ஆரம்பத்தில் இந்த நோயின் தீவிரத்தை ஆம்பர் அறியவில்லை. கடந்த 2012ம் ஆண்டு தான் இந்த பிரச்சினையால் தான் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்தார்.

மாடலிங்...

மாடலிங்...

அதுவரை அழகான பொம்பை போல இருந்ததால், மாடலிங் செய்து வந்தார் ஆம்பர். பின்னர் நோயின் தாக்கம் குறித்து தெரிய வந்ததும், பார்பி பொம்மையைப் போலவே உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கத் தொடங்கினார்.

10 ஆயிரம் ரசிகர்கள்...

10 ஆயிரம் ரசிகர்கள்...

அவற்றை தனது சமூகவலைதளப் பக்கம் மற்றும் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் ஆம்பர். தனது நோயால் மனமுடைந்து விடாமல், உற்சாகமாக செயல்பட்டு வரும் ஆம்பரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பின் தொடர்கின்றனர்.

செல்ல பார்பி பொம்மை...

செல்ல பார்பி பொம்மை...

தற்போது ஆம்பருக்கு 28 வயது ஆகிறது. தனது ரசிகர்கள் தன்னை ஒரு செல்ல ‘பார்பி' பொம்மையாக கொண்டாடுவதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் கூறுகிறார் அவர்.

English summary
A woman who suffers from a debilitating disease has revealed how she has learned to love the symptoms of her condition, because they make her look just like a 'Human Barbie'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X