For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“நான் எய்ட்ஸ் நோயாளி, என்னைத் தொட உங்களுக்கு தைரியம் உள்ளதா?”... நெகிழ வைக்கும் வீடியோ!

Google Oneindia Tamil News

ஹெல்சிங்கி: எய்ட்ஸ் நோய் தொடுதல் மூலமாக பரவாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பின்லாந்தைச் சேர்ந்த ஜேன் ஆண்டின் என்பவர் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார். அட்டையில் ‘நான் எய்ட்ஸ் நோயாளி, என்னைத் தொட தைரியம் இருக்கிறதா?' என்ற வாசகத்தை எழுதி, அதனை அருகில் வைத்துக் கொண்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையொன்றின் ஓரத்தில் நிற்கிறார் ஜேன்.

கண்களை மூடியபடி, கைகளை விரித்த படி நிற்கும் ஜேனை அப்பகுதி மக்கள் சிலர் வேடிக்கைப் பார்த்த படி கடந்து செல்கின்றனர்.

அரவணைப்பு...

அரவணைப்பு...

சிலரோ அருகில் வந்து அவருக்கு கை கொடுக்கின்றனர். சிலர் கட்டிப்பிடித்து தங்களது அரவணைப்பைத் தருகிறார்கள்.

குழந்தைகளும்...

குழந்தைகளும்...

பெற்றோரின் வழிகாட்டுதல் படி சில குழந்தைகளும் ஜேனுடன் கை குலுக்குகின்றன, கட்டிப் பிடிக்கின்றன.

வீடியோ...

வீடியோ...

2.34 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ நெகிழ்ச்சியாக இருக்கிறது. தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளிடம், ‘நீங்களும் எதிர்காலத்தில் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும்' எனக் கூறிவிட்டு, ஜேன்னைக் கைகுலுக்குகிறார்.

நெகிழ்ச்சி...

உலகம் அன்பின் அச்சாணியில் தான் இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த வீடியோ. இதுவரை இந்த வீடியோவை சுமார் 31 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். மக்களின் அன்பால் இறுதியில் ஜேன் அழுவதோடு முடிகிறது இந்த வீடியோ.

English summary
The Yle Kioski service's emotional video of Janne, who is HIV positive, has been acknowledged in various mainstream international media. The two and a half minute video, entitled "I'm HIV positive, do you dare touch me?", has been featured on Buzzfeed, the Huffington Post as well as UK paper The Independent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X