For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை.. தலை வெட்டப்பட்டது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவில், முதலாளியை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக, இந்தியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்தவர் சஜதா அன்சாரி. இந்தியாவை சேர்ந்த இவர், தன்னுடைய முதலாளியை சுத்தியலால் தாக்கி கொலை செய்து பணத்தை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டார்.

Indian beheaded in Saudi Arabia for 'murdering' boss

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அன்சாரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு பரிசாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல், சவுதியை சேர்ந்த அல் ரவேலி என்பவருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மனைவி மற்றும் அவருடைய 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அல் ரவேலிக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இருவருமே, கூர்மையான வாளால் கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

சவுதி அரேபியாவில், கொலை, பாலியல் பலாத்காரம், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் இதுவரை 65 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு 87பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபியா அரசு. உலகிலேயே அதிகளவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் சவுதி அரேபியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Saudi Arabia beheaded two people for murder on Wednesday, one of whom was from India, the interior ministry said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X