For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லா நாடுகளிலும் குவிந்து கிடக்கும் “இந்தியர்கள்” ... ஐ.நா. அறிக்கை

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக நாடுகளில் வாழும் வேற்று நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்று ஐ.நா.சபை தன்னுடைய ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுப்படி உலக அளவில் 24 கோடியே 40 லட்சம் பேர் அதாவது 2 கோடி அகதிகள் உள்பட தங்கள் சொந்த நாட்டை விட்டு அயல்நாடுகளில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முதலிடத்தில் இந்தியா:

முதலிடத்தில் இந்தியா:

இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி 1.6 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990 ஆம் ஆண்டு கணக்கை விட 67 லட்சம் அதிகமாகும்.

ஆசியாவின் 11 நாடுகள்:

ஆசியாவின் 11 நாடுகள்:

இந்த பட்டியலில் மெக்சிகோ, ரஷ்யா, சீனா, வங்காளதேசம் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 20 நாடுகளில், 11 நாடுகள் ஆசியா கண்டத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாட்டவர்கள் அதிகம்:

அயல்நாட்டவர்கள் அதிகம்:

வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர்களில் 3 இல் 2 பங்கு பேர் வெறும் 20 நாடுகளில் தான் வசிக்கின்றனர். இவ்வாறு அதிக வெளிநாட்டவர்களை தன்வசம் வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

52 லட்சம் பேர் இந்தியாவில்:

52 லட்சம் பேர் இந்தியாவில்:

இந்த 20 நாடுகளில் இந்தியா 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 52 லட்சம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இது கடந்த 1990 ஆம் ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
UN released a research details about Indian are high in foreign neighborhood countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X