For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் துண்டிக்கப்பட்ட மண்டை ஓட்டு எலும்பை, முதுகெலும்புடன் ஒட்ட வைத்து இந்திய டாக்டர் சாதனை

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் விபத்தில் துண்டிக்கப்பட்ட மண்டை ஓட்டு எலும்பை முதுகெலும்புடன் ஒட்ட வைத்து இந்திய வம்சாவளி டாக்டர் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள நியூகாசில் நகரைச் சேர்ந்தவர் டோனி கவன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் ஸ்பீட் ஹம்ப் மீது வேகமாக ஏறி நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டோனியின் மண்டை ஓட்டு எலும்பு முதுகெலும்பில் இருந்து ஒடிந்தது. அவரது தலையை வெறும் தசைகள் மட்டுமே உடலில் ஒட்டி வைத்திருந்தது.

Indian-origin doc saves Briton whose head was ripped off in accident

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் அனந்த் காமத் அறுவை சிகிச்சை செய்தார். காமத் டோனியின் மண்டை ஓட்டு எலும்பை முதுகெலும்புடன் வெற்றிகரமாக ஒட்ட வைத்து சாதனை படைத்துள்ளார்.

மண்டை ஓட்டு எலும்பு உடைந்தபோதிலும் அவரது மூளையில் சிறிதளவு கூட சேதம் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கியவுடன் அவரது இதயத்துடிப்பு சில நொடிகள் நின்றுள்ளது. அவருக்கு மீண்டும் இதயத்துடிப்பை வரவழைத்த பிறகே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

டோனியின் மண்டை ஓட்டை மெட்டல் பிளேட், போல்ட் போட்டு முதுகெலும்புடன் ஒட்ட வைத்துள்ளார் காமத்.

English summary
An Indian-origin doctor has saved the life of a Briton who head was ripped off in an accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X