For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 பாட்டில் கோமியத்துடன் நியூசிலாந்து போய் இறங்கிய இந்தியப் பெண்ணுக்கு ரூ. 26,000 அபராதம்

By Siva
Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இரண்டு பாட்டில்களில் கோமியம் வைத்திருந்த இந்திய பெண்ணுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் நியூசிலாந்து சென்றுள்ளார். வெல்லிங்டனில் உள்ள விமான நிலையத்தில் அவர் தான் இரண்டு பாட்டில்களில் கோமியம் வைத்திருந்ததை உடைமைகளை பரிசோதிப்பவர்களிடம் தெரிவிக்கவில்லை.

Indian woman carrying cow urine fined in New Zealand

பின்னர் பரிசோதனையில் அவர் கோமியம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த பெண் மருத்துவ காரணத்திற்காக கோமியத்தை கொண்டு சென்று சிக்கியுள்ளார். மருத்துவ காரணத்திற்காக கோமியத்தை எடுத்து வந்தால் அதை அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தேவையில்லை என்று மக்கள் நினைப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
An Indian woman has been fined $400 ($260 US) for bringing cow urine into New Zealand, a media report said. Border officials fined her after she failed to declare two bottles containing cow urine as part of her luggage after her flight landed here, New Zealand-based 3 News reported on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X