For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

B1 விசா மோசடி.. 1 மில்லியன் டாலர் கொடுத்து சமசரம் செய்த இன்ஃபோசிஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

நியூயார்க்(யு.எஸ்): H1 விசாவுக்கு பதிலாக B1 விசாவில் ஆட்களை அனுப்ப வேலை பார்த்த காரணத்திற்காக நியூயார்க் மாநிலம் இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுத்திருந்தது. தற்போது,. 1 மில்லியன் டாலர் கொடுத்து வழக்கு தொடர்ந்த நியூயார்க் மாநிலத்துடன் சமரசம் செய்து கொண்டது.

நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலக செய்திக் குறிப்பில் விசா மோசடி குறித்து விரிவான தகவல்களும், சமரச ஒப்பந்தம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

Infosys pays 1 million dollars for visa fraud

சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும், வேண்டுமென்றே தற்காலிக பயணிகள் விசாவில் ஊழியர்களை வரவழைத்து வேலை செய்ய வைத்துள்ளார்கள்.

ஹெச் 1 விசாவில் அழைத்து வர நேரமும் பணமும் அதிகம் செலவாகும் என்பதால், குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். நியூயார்க் மாநிலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்வதற்கு ஹெச்1 விசா தேவை. ஆனால் எளிதாக கிடைக்கக்கூடிய பயணிகள் விசா(B1)வில் அழைத்து வந்து ஹெச் 1 விசா பணிகளைச் செய்து முடிக்க வைத்துள்ளனர்.

இதற்காக B1 விசாவில் வரும் ஊழியர்களிடம், அமெரிக்க தூதரக அதிகாரிகளை எப்படி ஏமாற்ற வேண்டும், அமெரிக்காவுக்குள் வரும் போது சுங்க அதிகாரிகளிடம் என்ன சொல்ல வேண்டும் என்று குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

'எது செய்யனும் எது செய்யக்கூடாது' என்று பட்டியல் தயார் செய்து B1 விசா ஊழியர்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

நியூயார்க் மாநிலத்தவர்களின் வேலைக்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான செயல்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை, வெளிப்படைத் தன்மையை நிலை நாட்ட தனது அலுவலகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அட்டர்னி ஜெனரல் எரிக் டி ஷ்னைடெர்மன் கூறியுள்ளார்.

இன்ஃபோசிஸ் அலுவலக செய்திக் குறிப்பு, நியூயார்க் மாநிலத்துடன் 2010-11ம் ஆண்டுக்கான வரி சம்மந்தப்பட்ட விசாரணையை சமரசம் செய்து முடித்துள்ளோம் என்று கூறுகிறது.

நியூயார்க் மாநிலத்தின் விசாரணை, ஆவணங்கள் மீதான தவறுகள் மீதானதாகும். இன்ஃபோசிஸ் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் ஈடுபட்டதில்லை. இந்த பண பரிவர்த்தனை 2013 ம் ஆண்டு அமெரிக்க நீதித்துறையுடன் ஏற்பட்ட உடன்படிக்கை தொடர்பானது. இருதரப்பும் சட்டசிக்கலை தொடர வேண்டாம் என்று இந்த முடிவுக்கு வந்தோம் என்று இன்ஃபோசிஸ் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்ஃபோசிஸின் திட்ட வரையறைகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படுவோம். அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை தொடர்வோம், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த வகையில் பணியாற்றுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு 34 மில்லியன் டாலர்களை வழங்கி விசா மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை இன்ஃபோசிஸ் சமரசம் செய்து முடித்து வைத்தது. அப்போதும் தாங்கள் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை, வழக்கை முடிப்பதற்காக பணம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகத்தான் கூறியிருந்தார்கள்.

-இர தினகர்

English summary
Infosys agreed to pay 1 million dollar to New York state as settlement for B1 visa abuse case. New York state attorney office released a statement saying Infosys used B1 visas instead of H1 visa to bring employees to make them work for the duties to be performed by H1 visa holders. It further alleged that there were instructions in the form of dos and dont's to employees to deceive US consular officers and Customs and Border and Security officers. Infoysys statement says it is settlement in line with 2013 settlement with US Justice department and denies any wrong doing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X