For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்சூரன்ஸ் ப்ரிமியம் அதிகரிப்பு!– ஹிலரிக்கு பூமராங் ஆகுமோ ஒபாமா கேர்?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அனைவருக்கும் குறைந்த ப்ரீமியத்துடன் மருத்துவக் காப்பீடு, கிடைக்கச் செய்ய வேண்டும் என்று Affordable Care என்ற பெயரில் திட்டத்தை அதிபர் ஒபாமா அறிமுகம் செய்து வைத்தார். அது அவரது பெயரால் 'ஒபாமாகேர்' என்றே வழக்கத்தில் அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் மருத்துவக் காப்பீடு இல்லாத மில்லியன்கணக்கானோர் புதிதாக காப்பீடு வாங்கினர். சிறுதொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Is Obama care turns against Hillary?

இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு கடிவாளம் போட்டதாக ஒபாமா அரசு பெருமை கொண்டது. தொடக்கம் முதலாகவே இந்த திட்டத்தை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சியினர், பாராளுமன்றத்தை முடக்கினார்கள்., திட்டத்தை திரும்பப்பெற பல முயற்சிகள் எடுத்தார்கள்.

ட்ரம்பும் தான் ஆட்சிக்கு வந்தால்,முதல் வேலையாக 'ஒபாமாகேர்' திட்டத்தை ஒழித்துக் கட்டுவேன் என்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதிபர் வேட்பாளர் விவாதங்களிலும் அதைக் கூறினார்.

ஹிலரி க்ளிண்டன், ஒபாமாகேர் பல நல்ல தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, ஒபாமாகேர் திட்டத்தை மேலும் வலுவாக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

தனது ஆட்சியில் 'ஒபாமாகேர்' திட்டத்தை மேலும் வலுவாக்குவது முக்கிய அம்சமாகும் என்றும் கூறுகிறார்.

இந் நிலையில் அடுத்த ஆண்டிற்கான ப்ரீமியம் தொகை 22 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தால் மில்லியன் கணக்கானோர் பலனடைந்துள்ளார்கள் என்று ஒபாமா பிரச்சாரம் செய்து வரும் நேரத்தில். அவரது அரசு இத்திட்டத்தின் ப்ரீமியம் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ட்ரம்புக்கு இது மிகப்பெரிய ஆயுதமாகத் தெரிகிறது. ஒபாமாகேர் மக்களுக்கு பிரயோஜனம் இல்லாதது. அதை திரும்பப் பெறும் வரை ஒயமாட்டேன் என்று சூளூரைத்துக் கொண்டிருக்கிறார்.

சி.என்.என் / ஒ ஆர் சி கருத்துக் கணிப்பில் ஒபாமா கேர் ப்ரீமியம், மக்கள் முன் உள்ள ஐந்தாவது பிரச்சனை தான். மற்ற பிரச்சனைகளின் அடிப்படையில்தான் வாக்குப்பதிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்

ஹிலரி தரப்பினர், ஒபாமா கேர் திட்டத்தை திரும்பப் பெற்றால் பல குழப்பங்கள் தான் மிஞ்சும். அதை மேலும் வலுப்படுத்துவதுதான் சரியான வழி என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

தேர்தலுக்கு இரண்டு வாரத்திற்கும் குறைவாக இருக்கும் நேரத்தில், அரசின் மருத்துவக் காப்பீடு ப்ரீமியம் தொடர்பான அறிவிப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துமா? ஹிலரிக்கு பாதிப்பு ஏற்படுத்துமா? ட்ரம்ப் வெற்றி பெற வாய்ப்புள்ளதா?

நவம்பர் 8 ம் தேதி இரவு அமெரிக்க நேரம். 9ம் தேதி காலை இந்திய நேரத்தில் முடிவுகள் தெரியவரும்..

-இர தினகர்

English summary
Is Obama care insurance scheme become big issue in US presidential election? Will the issue turn against Hillary's victory? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X