For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓ மை காட்...சொர்க்கத்தில் இருந்து தவறி விழுந்து ஒரு தேவதை செத்துப் போச்சாமே!

Google Oneindia Tamil News

பீஜிங்: சொர்க்கத்தில் இருந்து தவறி விழுந்த தேவதை பூமியில் விழுந்து இறந்ததாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம் சீனாவில் உள்ள சிலை என தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் நல்ல விசயங்களைப் போலவே சமயங்களில் வதந்திகளும் பரபரப்பாக பரவி விடுகின்றன. அதனை உண்மையென நம்பி பலரும் அதனை ஷேர் செய்வதால் அது மிக விரைவாக உலகம் முழுவதும் பரவி விடுகிறது.

அந்தவகையில், சமீபத்தில் தேவதை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் பரவியது.

பூமியில் விழுந்த தேவதை...

அதாவது சொர்க்கத்தில் இருந்து தவறி பூமியில் விழுந்த தேவதை உயிரிழந்தார் என்ற தகவலோடு அந்தப் புகைப்படம் இணையத்தில் பரவியது. மேலும் உலகத்தின் அழிவிற்கு இது அடையாளம் எனவும் அச்சுறுத்தப் பட்டது.

தோளில் இறக்கைகளுடன்...

அந்தப் புகைப்படத்தில் தோளில் இறக்கைகளைக் கொண்ட வயதானப் பெண் ஒருவர் வெள்ளை நிற உடை அணிந்து குப்புற விழுந்து இறந்து கிடப்பது போல் இருந்தது. உடை மற்றும் இறக்கைகளைக் கொண்டு அவர் தேவதை தான் என நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.

ஏஞ்சல் சிலை...

ஆனால், அந்தப் புகைப்படம் உண்மையில் சீனாவின் பீஜிங் நகரில் வைக்கப்பட்டுள்ள ஏஞ்சல் சிலை என தற்போது தெரிய வந்துள்ளது. இது கடந்த 2008ம் ஆண்டு சுன் யுவான் மற்றும் பெங் யு ஆகிய கலைஞர்கள் உருவாக்கப் பட்டது.

சர்ச்சைக் கலைஞர்கள்...

உயிரிழந்த மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பைக் கொண்டு தங்களின் படைப்புகளைத் தத்ரூபமாக உருவாக்குபவர்கள் இந்தக் கலைஞர்கள். இதனால் அடிக்கடி இவர்கள் சர்ச்சையில் சிக்கிவதுண்டு.

சிலிக்கா ஜெல்லால் ஆனது...

தற்போது இணையத்தில் வைரலான இந்த தேவதை சிலை, சிலிக்கா ஜெல், பைபர் கிளாஸ், துருப்பிடிக்காத இரும்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.

இதே வேலையா போச்சு...

கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என மெய்ப்பித்துள்ளது இந்தத் தேவதை சிலை.. வெட்டித்தனமான சில நெட்டிசன்களுக்கு பீதி கிளப்புவதே வேலை...!

English summary
Two Chinese artistes, Sun Yuan and Peng Yu have created a new art that has gotten everyone wondering. The life-like artwork has got lots of people believing it is real.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X