For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் வீடியோக்களில் வரும் முகமூடி மனிதன் 'ஜிஹாதி ஜான்' யார் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ள பல வீடியோக்களில் இருக்கும் முகமூடி அணிந்த ஜிஹாதி ஜான் லண்டனைச் சேர்ந்த முகமது இம்வாசி என்று தெரிய வந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பல பிணையக் கைதிகளின் தலையை துண்டித்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்களில் கருப்பு உடை அணிந்து முகத்தையும் கருப்பு நிற துணியால் மூடிக் கொண்டிருந்த நபர் காண்பிக்கப்பட்டார்.

அவர் வீடியோக்களில் ஆங்கிலத்தில் பேசி வந்தார். அவர் 3 அமெரிக்கர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 2 பேரின் தலையை துண்டித்துள்ளார்.

ஜிஹாதி ஜான்

ஜிஹாதி ஜான்

வீடியோக்களில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அந்த முகமூடி அணிந்த நபர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

லண்டன்வாசி

லண்டன்வாசி

ஜிஹாதி ஜான் எனப்படும் அந்த முகமூடி அணிந்த நபர் வடக்கு லண்டனில் வசிக்கும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த முகமது இம்வாசி என்பது தெரிய வந்துள்ளது. அவர் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் பட்டம் பெற்றவர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

சிரியா

சிரியா

இம்வாசி கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார். வீடியோக்களில் உள்ள ஜிஹாதி ஜான் முகமது இம்வாசி தான் என்பதை அவரது நெருங்கிய நண்பர் தான் அடையாளம் கண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

போலீசார்

போலீசார்

எந்த நபரின் அடையாளத்தையும் நாங்கள் தற்போது உறுதி செய்ய மாட்டோம் என்று இங்கிலாந்தின் தீவிரவாத தடுப்பு பிரிவு கமாண்டர் ரிச்சர்ட் வால்டன் தெரிவித்துள்ளார்.

English summary
According to BBC, the ISIS beheader Jihadi John is identified as Mohammad Emwazi from London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X