For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓமைகாட்: அமேசானில் ரூ.2,500க்கு விற்பனைக்கு வந்த ஐஎஸ்ஐஎஸ் பிரச்சார பத்திரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிரச்சார பத்திரிக்கை அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது தெரிய வந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிரச்சார பத்திரிக்கையான தபிக் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அமேசான் இணையதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் என ஐஎஸ்ஐஎஸ் மீடியா மையமான அல் ஹயாத் மீடியா சென்டரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அல் ஹயாத் மீடியா சென்டர் பல்வேறு பிரச்சார வீடியோக்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ISIS magazine briefly available for sale on Amazon

தபிக் ஆங்கில பத்திரிக்கை அமேசான் இணையதளத்தில் ரூ.2,463க்கு விற்பனையில் இருந்தது. தபிக் தீவிரவாதிகளின் பத்திரிக்கை என தெரிந்ததும் அதன் பெயரை இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது அமேசான். தபிக் பத்திரிக்கையின் வெளியீட்டாளர் என்று கிரியேட்ஸ்பேஸ் இன்டிபென்டன்ட் பப்ளிஷிங் பிளாட்ஃபார்ம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கிரியேட்ஸ்பேஸ் இன்டிபென்டன்ட் பப்ளிஷிங் பிளாட்ஃபார்ம் என்பது அமேசானுக்கு சொந்தமான வெளியீட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தபிக் பத்திரிக்கை தற்போது விற்பனையில் அல்ல என்று அமேசான் அறிக்கை வெளியிட்டுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள சிறிய நகரமான தபிக்கின் பெயரை தான் பத்திரிக்கைக்கு வைத்துள்ளார்கள் தீவிரவாதிகள். அந்த பத்திரிக்கை கடந்த 2014ம் ஆண்டில் துவங்கப்பட்டது.

English summary
English-language propaganda magazine of dreaded terror group Islamic State were briefly available for sale on the website of online retailer Amazon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X