For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிரியா எல்லையில் கொபானே நகரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

கொபான்: சிரியா எல்லையில் உள்ள கொபானே நகரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகளை குர்து படையினர் விரட்டியடித்துள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ளனர். இவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈராக் மற்றும் சிரியாவில் வாழும் குர்து இன மக்களின் ராணுவமும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு உதவி வருகின்றன. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து தியாலா மாகாணம் முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளது.

Islamic State pushed out of Kobane by Kurdish troops

அதே போன்று சிரியா எல்லையில் உள்ள கொபானே நகரம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் இருந்தது. அதை மீட்க குர்து படையினர் தீவிரமாக போரிட்டனர்.

அமெரிக்கா தலைமையிலான படைகளும் இதற்கு உதவின. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு கொபானே நகரம் மீண்டும் குர்து ராணுவம் வசம் ஆனது. அங்கிருந்த தீவிரவாதிகள் அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டு விட்டனர்.

English summary
Kurdish militias claimed on Monday night to have driven Islamic State jihadists from the Syrian town of Kobane, after an intense three month battle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X