For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்துங்கள்! - மோடி

By Shankar
Google Oneindia Tamil News

பெர்லின்: உலகம் முழுவதும் தலைதூக்கி வரும் தீவிரவாதத்தையும் அணு ஆயுதங்கள் போலவே கருதி கடுமையாக எதிர்க்க வேண்டும் என உலகுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மோடி, நேற்று தலைநகர் பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்செலா மெர்கலுடன் தீவிரவாதம் குறித்து பேசினார்.

Isolate nations backing terror: Modi

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, "மனித குலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்துக்கு எதிராக மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்," என்றார்.

தீவிரவாதத்தைச் சமாளிப்பது குறித்து கடுமையான கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் உலகம் முழுவதற்கும் தீவிரவாதம் ஒரு சவாலாக உள்ளது. அணு ஆயுதங்கள் போன்று தீவிரமாக கையாளப்பட வேண்டிய விவகாரம் இது.

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்தவது? என்பது தொடர்பாக நாம் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் மற்றும் அரசுகளை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது," என்றார்.

English summary
Asking the international community to treat terrorism as “sensitively” as nuclear proliferation, Prime Minister Narendra Modi on Tuesday said the world should collectively put pressure on countries which provide shelter to terrorists, in an apparent reference to Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X