For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தாலி நில நடுக்கம்.. மாயமானவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரோம்: இத்தாலியில் நேற்றுமுன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரையிலான நிலவரப்படி 250 ஆக உள்ளது. 368க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் மத்திய பகுதிகள் தெற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை, அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 3.36 மணிக்கு மக்கள் உணர்ந்துள்ளனர்.

Italy earthquake: Rescuers' desperate search for survivors

அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குட்டிநகரமான அமாட்ரைசில், பாதி ஊர் தரைமட்டமாகிவிட்டதாக அந்நகர மேயர் கூறியிருந்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 368 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சேதம் அதிகம் என்பதால், உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை அடையாளம் காணுவதற்காக மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று 3வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறகிறது.

English summary
Rescuers are combing through mountains of rubble in central Italy in hopes of finding more human.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X