For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமியை உள்ளது உள்ளபடி ‘சாம்பல்’ நிறத்தில் படம் பிடித்த ஜப்பான் சாட்டிலைட்!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் செயற்கைக்கோள் ஒன்று பூமியை தத்ரூபமாக சாம்பல் நிறத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹிமாவரி-8 என்ற வானிலை குறித்த செயற்கைக் கோளை ஏவியது ஜப்பான். இந்த செயற்கைக் கோளானது பூமியில் இருந்து 22,240 மைல்கள் தொலைவில் இருந்தபடி, பூமியை அழகாக புகைப்படம் எடுத்துள்ளது.

இந்த புகைப்படமானது மிகைப்படுத்தப்பட்ட விசயங்கள் ஏதுமின்றி, சாம்பல் நிறத்தில் பூமியைக் காட்டுகிறது.

உண்மையான நிறம்...

உண்மையான நிறம்...

நாம் பார்க்கும் பூமி குறித்த பிம்பத்தை தகர்ப்பதாக இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது. ஆனால், இது தான் பூமியின் உண்மையான நிறம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பாலைவனமும் உள்ளது...

பாலைவனமும் உள்ளது...

இந்தப் புகைப்படத்தில் பூமியில் உள்ள நில மற்றும் நீர்ப்பரப்புகள் மட்டுமின்றி வானத்தில் உள்ள மேகங்களும் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய பாலைவனம் ஒன்றும் அழகாகத் தெரிகின்றது.

சூரியனின் எதிரொளிப்பு...

சூரியனின் எதிரொளிப்பு...

இந்தப் புகைப்படமானது அந்த செயற்கைக் கோளில் உள்ள அட்வான்ஸ் ஹிமாவரி இமேஜரால் எடுக்கப் பட்டுள்ளது. இதில் வியக்கத்தக்க வகையில் சூரியனின் எதிரொளி கூட அழகாக பதிவாகியுள்ளது.

இது தான் உண்மை...

இது தான் உண்மை...

பூமி குறித்து நாம் பார்க்கும் பெரும்பாலான படங்கள் நிறங்கள் கரெக்‌ஷன் செய்யப்பட்டவை ஆகும். இந்தப் புகைப்படம் மட்டுமே பூமியின் உண்மையான நிறத்தைக் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஹிமாவரி 9...

ஹிமாவரி 9...

விரைவில் ஹிமாவரி 9 செயற்கைக் கோளை ஜப்பான் ஏவவுள்ளது. இவை கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியங்களை ஆய்வு செய்வதற்காக அனுப்படும் செயற்கைக் கோளாகும்.

English summary
Earth’s true colour has been revealed in amazing detail by a Japanese weather satellite that could revolutionise forecasting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X