For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரும் பாகிஸ்தானோடு சேருமாம்.. மக்களுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பும் பாக்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: காஷ்மீரும் பாகிஸ்தானின் அங்கமாகும் என்ற வாசகங்களோடு தனது நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அரசு எஸ்எம்எஸ் அனுப்பி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அரசு சார்பில் செல்போன் மூலமாக இந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா எத்தனை காலம்தான் கொடுமைகளை தொடரும். காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கமாகும் என அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது.

Kab tak Zulm Karega Hindustan- Pakistan's desperate message to its people

இதைத்தொடர்ந்து இன்னொரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலான மெசேஜ். அதில், ஐநா சபை, காஷ்மீர் பற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசே மக்களை தூண்டும் விதமாக மெசேஜ்கள் அனுப்புவது குறித்து மூத்த பத்திரிகையாலரும், காஷ்மீர் விவகாரங்கள் குறித்து அதிகமாக எழுதியுள்ளவருமான டனீஷ் மன்சூரிடம் கேட்டபோது, "பாகிஸ்தான் தற்போது சர்வதேச அளவில் தனித்து விடப்பட்டுள்ளது. எப்போதுமே தங்களை உயர்வாகவே மக்களிடம் கூறிவரும் ராணுவத்திற்கு, இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பெரும் அவமானமாகிவிட்டது. எனவே மக்களை திசை திருப்ப இப்படிப்பட்ட மெசேஜ்களை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது" என கூறுகிறார். பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவில்லை போலும்.

Kab tak Zulm Karega Hindustan- Pakistan's desperate message to its people
English summary
Will Pakistan ever learn? Despite coming under pressure from the international community for sponsoring terrorism in India, Pakistan continues to whip up passions. Now here is a message that the Pakistan government has sent out to all mobile subscribers in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X