For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாடையோடு குழந்தைக்கு பாலுட்டும் படத்தை தில்லாக பதிவிட்ட கிர்கிஸ்தான் ஜனாதிபதி மகள்

கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகள் உள்ளாடைகளை அணிந்துகொண்டு தன் குழந்தைக்குப் பாலூட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கிர்கிஸ்தான்: என் குழந்தைக்கு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் பாலூட்டுவேன் என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகள் அலியா ஷகீயேவா.

இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு பல்வேறு விவாதங்களை முன்வைத்துள்ளது. நான் குழந்தைக்குப் பாலூட்டும்போது, என்னால் செய்ய முடிந்த சிறப்பான செயலைச் செய்வதாக உணர்கிறேன் என்றார் அலியா.

என் குழந்தையைப் பராமரிப்பதும், அவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் பிறர் என்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை விட எனக்கு முக்கியமானது, என்பது அலியா ஷகீயேவாவின் தில் கருத்து.

தாய்பால் கொடுக்கும் பெண்கள்

தாய்பால் கொடுக்கும் பெண்கள்

பொது இடங்களில் பாலூட்டுதல் இந்தியாவில் மட்டுமல்ல முன்னேறிய மேற்கத்திய நாடுகளிலும் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இதுவரை நீடிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பல காமுகர்களின் கண்களில் இருந்து தப்புவதற்காகவே தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் பேருந்து நிலையங்கள், கோவில்கள், ரயில்நிலையங்களில் திறக்கப்பட்டுள்ளன. இதை மாற்றும்விதமாக ஆங்காங்கே ஒரு சில பெண்கள் பொதுவெளியில் பாலூட்ட முன்வந்தாலும், மிக இயல்பான இந்தச் செயல் இன்னமும் அதிசயமாகக் கருதப்படுகிறது.

லாரிஸா வாட்டர்ஸ்

லாரிஸா வாட்டர்ஸ்

ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் செனட்டருமான லாரிஸா வாட்டர்ஸ். கடந்த சில மாதங்களுஙககு ஆஸ்திரேலியாவின் ஃபெடரல் நாடாளுமன்றக் கூட்டத்தில், குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த போதே, எழுந்து நின்று, ‘கருப்பு நுரையீரல் நோய்' குறித்துத் தன் தரப்பு கருத்தை முன்வைத்து பேசினார். அந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அலியா ஷகீயேவா

அலியா ஷகீயேவா

கடந்த ஏப்ரல் மாதம், கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகள் அலியா ஷகீயேவா, 'என் குழந்தைக்கு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் பாலூட்டுவேன்' என்னும் வாசகத்துடன் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். கடும் விமர்சனத்தை கிளப்பவே, அப்பதிவை நீக்கினார்.

கிர்கிஸ்தான்

கிர்கிஸ்தான்

முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தான், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் குடியரசு நாடாகும். அதன் சமூகம் பழமைவாதம் நிரம்பியாதாக இருந்தாலும், பொது இடங்களில் பாலூட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

அலியாவிற்குக் கண்டனம்

அலியாவிற்குக் கண்டனம்

பொது இடங்களிலும் பூங்காக்களிலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டினாலும், ஒரு துணியை வைத்துத் தங்கள் மார்புகளை மூடிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அலியாவின் படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதும், இந்த நெருக்கமான தருணத்தைப் பகிர்ந்திருக்கத் தேவையில்லை என்று சிலர் கருதினார்கள். ஆனால் அவர் அடக்கமாக நடந்துகொள்ளவில்லை என்று சிலர் கண்டித்தனர்.

பெண்கள் பாராட்டு

பெண்கள் பாராட்டு

அலியா பாலூட்டும் புகைப்படம் கிர்கிஸ்தானுக்கு வெளியிலும் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள செய்தித்தாள்களும், இணையதளங்களும் அதைப் பிரசுரித்தன. பெண்களின் உடல் குறித்து காலம் காலமாக நிலவும் கருத்தை உடைத்ததற்காக பலரும் அவரைச் சமூக ஊடகத்தில் பாராட்டினர்.

பிபிசிக்கு பேட்டி

பிபிசிக்கு பேட்டி

இது குறித்து பிபிசிக்கு வழங்கிய ஒரு பிரத்யேகப் பேட்டியில், பெண்ணின் உடலை அதீதமாகப் பாலியல் தன்மையுடன் சித்தரிக்கும் கலாசாரத்தின் விளைவே இப்பிரச்னைக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார். எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த உடல் கொச்சையானதல்ல. இது நன்று செயல்படக்கூடியது. இதன் நோக்கம் என் குழந்தையில் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது. இது போகப் பொருளல்ல, என்று அலியா கூறியுள்ளார்.

பெற்றோருக்கும் வருத்தம்

பெற்றோருக்கும் வருத்தம்

அலியாவின் பெற்றோரான அதிபர் அல்மாஸ்பியேக் அடாம்பாயேஃப் மனைவி ரைசா ஆகியோரும் இச்சம்பவத்தால் வருத்தமடைந்தனர். 'அவர்கள் உண்மையாகவே இதை விரும்பவில்லை. இளைய தலைமுறையினர் தங்கள் பெற்றோரை விடவும் குறைவாகவே பழமைவாதிகளாக உள்ளனர் என்பதால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்பது அலியாவின் கருத்தாகும்.

சமூகவலைத்தளவாசி

சமூகவலைத்தளவாசி

தன்னுடைய கலைப் படைப்புகள், அவரால் நுணுக்கமாக வரையப்பட்ட, பெரும்பாலும் திறந்தவெளி நிலப்பரப்புக்களை பின்புலமாகக்கொண்ட, தன்னுடைய மற்றும் தன் குழந்தை மற்றும் கணவரின் உருவப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ஷகீயேவா சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aliya Shagieva posted the photo on social media back in April with the caption: 'I will feed my child whenever and wherever he needs to be fed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X