For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறிஸ்துமஸுக்காக 10 லட்சம் விளக்குகளால் அலங்காரம் – கான்பெராவில் ஒரு கின்னஸ் சாதனை

Google Oneindia Tamil News

கான்பெரா: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மர விளக்கு அலங்காரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

10 லட்சத்திற்கும் அதிகமான எல்.இ.டி விளக்குகள் இந்த மரத்தில் பொருத்தப்பட்டு நேற்று மாலை ஒளிர வைக்கப்பட்டன. கட்டடக் கலை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் என பலர் இணைந்து இந்த விளக்கு அலங்காரத்தை செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஈடுபடுவது சமூகத்தை ஒன்றிணைப்பதோடு, மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக விளக்கு அலங்காரத்தை ஒருங்கிணைத்த டேவிட் ரிச்சர்ட்ஸ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தனது வீட்டில் 5 லட்சம் விளக்குகளால் அலங்கரித்து கின்னஸ் சாதனை படைத்தவர் டேவிட் ரிச்சர்ட்ஸ் என்பது நினைவிருக்கலாம்.

English summary
To celebrate the holiday season, Lego has built a giant Christmas tree in Sydney, Australia, complete with a life-sized, surfboard-wielding Santa and sleigh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X