For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுங்க வைத்த நிலநடுக்கம்.. எவெரெஸ்ட் அடிவாரத்திலிருந்து "லைவ்" செய்யும் யுகே மலையேற்ற வீரர்!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் குறித்த பதிவுகளை எவெரெஸ்ட் மலையேற்ற வீரரான டேனியல் மசூர் என்பவர் நேரடியாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேபாள நிலநடுக்க நிகழ்வின்போது எவரெஸ்டில் முகாமிட்டிருந்த மலையேற்றக் குழுவினரில் முக்கியமான வீரர் டேனியல். இங்கிலாந்தினைச் சேர்ந்த இவர் 2006 ஆம் ஆண்டிலிருந்து மலையேற்றத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகின்றார்.

live twits from Everest climber

இவர் தற்போது எவரெட்ஸ் மலையேற்றத்துக்காக வந்து அடிவார முகாமில் தங்கியுள்ளார். அங்கிருந்தபடி நிலநடுக்க விவரம், உள்ளிட்டவை குறித்து லைவாக டுவிட் போட்டு வருகிறார்.

தன்னுடைய பதிவிகளில், "சுற்றிலும் பனி சூழ்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு அதிகரித்து வருகின்றது. 12 பேருக்கும் மேலான வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். வாழ்வா, சாவை நிலை இங்கு" என்று நேரடிப் பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் டேனியல்.

நாங்கள் கேம்ப் 1ல் உள்ளோம். இங்கும் நில அதிர்வு ஏற்பட்டது. எனினும் , வடக்குப் பகுதியில்தான் பெருமளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. வழி முழுவதுமாக மறைந்துவிட்டது என்றும் அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
everest climber Daniel mazur tweets about earth quake in Nepal and everest at the time of their camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X