For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாத்ரூமில் ஐபோனை பயன்படுத்தியதால் பலியான பிரிட்டன் இளைஞர்!

குளிக்கும் போது ஐபோனை சார்ஜ் போட்டபடி மார்பு பகுதியில் வைத்திருந்ததால் தண்ணீருக்குள் போன் விழுந்து மின்சாரம் பாய்ந்து பிரிட்டன் இளைஞர் உயிரிழந்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பிரிட்டன்: லண்டனில் ஐபோனை நீளமான கேபிள் கொண்டு சார்ஜ் போட்டு விட்டு குளிக்கும் போது போனை மார்பில் வைத்திருந்ததால் எதிர்பாராதவிதமாக போன் தண்ணீருக்குள் விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

லண்டனை சேர்ந்தவர் ரிச்சர்டு புல் (32). இவர் ஆப்பிள் நிறுவனத்தின் விலை மதிப்புள்ள ஐபோனை பயன்படுத்தி வந்தார். அவர் தனது போனுக்கு நீளமான கேபிள் மூலம் சார்ஜ் போட்டுவிட்டு குளித்துக் கொண்டிருந்தார்.

Man killed trying to charge iPhone while lying in the bath

எனினும் குளிக்கும்போதும் அவர் தனது போனை மார்பு பகுதியில் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது போன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்தது. இதனால் மார்பு பகுதியில் மின்சாரம் பாய்ந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எந்நேரமும் செல்போனை பயன்படுத்துவதால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

English summary
Richard Bull died when his iPhone charger made contact with the water while he was taking a bath in his home in London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X