For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்யாணம் பண்ணினா உடம்புக்கு ஆகாது பாஸ்... இதை நாம சொல்லலை... ஆய்வு சொல்லுது!

Google Oneindia Tamil News

பெர்லின்: திருமணத்தால் தம்பதிகளின் உடல் அமைப்பிற்கு தீங்கு ஏற்படுவதாக ஐரோப்பிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திருமணத்திற்கு அப்புறம் வாழ்க்கையே மாறி விட்டதாக பலர் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். வாழ்க்கை மட்டுமல்ல, உடல் அமைப்பும் பலருக்கு மாறி விடுகிறது. அப்டி இருந்த நான் எப்டி ஆகிட்டேன் என கல்யாண ஆல்பத்தைப் பார்த்து புலம்புபவர்கள் ஏராளம்.

ஆனால், தற்போது இது ஆய்வு மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம், திருமணத்தால் தம்பதிகளின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு...

ஆய்வு...

சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் பல்கலைக்கழகமும், ஜெர்மனியை சேர்ந்த மாக்ஸ் கல்வி நிறுவனமும் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

உடல் எடை அதிகம்...

உடல் எடை அதிகம்...

இந்த ஆய்வின் படி, திருமணம் ஆன தம்பதிகளின் உடல் எடையானது உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள உடல் நிறை குறியீட்டெண்னை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

திருமணமாகாதவர்கள்...

திருமணமாகாதவர்கள்...

மேலும், திருமணமான தம்பதிகளின் உடல் எடையோடு ஒப்பிடுகையில், தனியாக வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உணவுப் பழக்க மாற்றம்...

உணவுப் பழக்க மாற்றம்...

திருமணம் செய்து கொண்டு குடும்ப அமைப்பிற்குள் செல்லும் தம்பதிகளின் உணவு பழக்க வழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இது நேரடியாக அவர்களின் உடல் எடையை பாதிக்கிறது என இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

English summary
Marriage may not be good for your BMI, suggests a new study published in the journal Social Science & Medicine on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X