For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மன்விங்ஸ் துணை விமானி போன்றே தற்கொலை செய்ய மலேசிய விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய விமானி?

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: தற்போது மடகாஸ்கர் அருகே கிடைத்துள்ள விமானத்தின் வால் பகுதியை வைத்து பார்க்கையில் மாயமான மலேசிய விமானத்தை அதன் விமானி ஜாஹரி அகமது தற்கொலை செய்ய விபத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு தெரிவித்தது.

17 மாதங்களாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடியும் விமானத்தின் பாகம் எதுவும் கிடைக்கவில்லை.

வால் பகுதி

வால் பகுதி

பிரான்ஸின் கட்டுப்பாட்டில் 'இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீ யூனியன் தீவு' (மொரீஷியஸுக்கு அருகே உள்ளது) தீவில் கடந்த புதன்கிழமை போயிங் 777 ரக விமானத்தின் வால் பகுதி கரை ஒதுங்கியது. தமிழர்கள் கணிசமாக வசிக்கும் தீவான அங்கு கிடைத்துள்ள பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடயைதாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

விமானம்

விமானம்

விமானம் திடீர் என்று அதிவேகத்தில் தரைநோக்கி வந்துள்ளது. அப்போது தான் அந்த வால் பகுதி உடைந்து கடலில் விழுந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை

தற்கொலை

குடும்ப பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த விமானி ஜாஹரி அகமது தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் முன்பே தெரிவித்திருந்தனர். தற்போது நடந்துள்ளதை பார்க்கையில் அவர்களின் கணிப்பு சரியாகியுள்ளது என்று தெரிகிறது.

ஜெர்மன் விங்ஸ்

ஜெர்மன் விங்ஸ்

கடந்த மார்ச் மாதம் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ் வேண்டும் என்றே பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் லுபிட்ஸ் உள்பட 149 பேர் பலியாகினர்.

அதே முறை

அதே முறை

லுபிட்ஸ் விமானத்தின் வேகத்தை திடீர் என்று அதிகரித்து தரை நோக்கி வந்து மலை மீது மோதச் செய்தார். மலேசிய விமானமும் அதே போன்று திடீர் என்று அதிவேகத்தில் தரை நோக்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to experts, missing Malaysian airlines flight MH 370 crash is not an accident but suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X