For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூரில் மோடி... லீ குவான் யூவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார்.

சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்ட லீ குவான் யூவ் நிமோனியாவால் கடந்த 23ம் தேதி மரணம் அடைந்தார். 91 வயதில் மரணம் அடைந்த அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது.

Modi arrives in Singapore to attend Lee’s funeral

முன்னதாக யூவின் மரணச் செய்தி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,

தலைவர்களிடையே லீ ஒரு சிங்கம், தொலைநோக்கு பார்வை உள்ள அரசியல் தலைவர். அவரது வாழ்க்கை அனைவருக்கும் பல அரிய பாடங்களை கற்பித்துள்ளது. அவரது மரணச் செய்தியை கேட்டு கவலை அடைந்தேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடக்கும் யூவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். யூவின் இறுதிச் சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், தென் கொரிய அதிபர் பார்க் ஜியூன் ஹை, ஆஸ்திரேலிய பிரதமர் டோன் அப்பாட், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ மற்றும் மலேசிய அரசர் அப்துல் ஹலீம் ஷா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Prime Minister Narendra Modi on Sunday arrived in Singapore to attend the State Funeral Services of Singapore’s founder and first premier Lee Kuan Yew. Lee, 91, died of severe pneumonia on March 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X