For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரானுக்கு சென்றவுடன் பாரசீக மொழியில் ட்வீட் செய்த மோடி

By Siva
Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பாரசீக மொழியில் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து ஈரான் சென்றார். தெஹ்ரான் விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாஜ்பாயை அடுத்து 15 ஆண்டுகள் கழித்து ஈரான் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பாரசீகம்

ஈரானுக்குள் நுழைந்தவுடன் மோடி பாரசீக மொழியில் ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் பாரசீக மொழியில் கூறியிருப்பதாவது, நான் ஈரானுக்குள் நுழைந்துவிட்டேன். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஈரான்

மோடி தனி விமானம் மூலம் தெஹ்ரான் விமான நிலையத்தை அடைந்தபோது எடுத்த புகைப்படத்துடன் மேலும் ஒரு ட்வீட்டை பாரசீக மொழியில் வெளியிட்டுள்ளார்.

மோடி

மோடி

மோடி பாரசீக மொழியில் ட்வீட் செய்தது ஆச்சரியம் அல்ல. ஏனென்றால் அவர் எந்த நாட்டிற்கு பயணம் செய்தாலும் அந்நாட்டு மொழியில் ட்வீட் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு

தெஹ்ரானில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மோடியின் பயணத்தின்போது இந்தியா, ஈரான் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு

நட்பு வலுப்படுத்தப்படுகிறது...பிரதமர் மற்றும் ஈரான் அதிபர் ரூஹானி சந்தித்து பேசியபோது இந்தியா, ஈரான் உறவு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

English summary
PM Modi has tweeted in persian after he entered Iran. Modi is in Iran on a two day visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X