For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய தயாரிப்பான துருவ் ஹெலிகாப்டர் நேபாள ராணுவத்தில் சேர்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

காத்மாண்டு: இந்தியாவின் எச்.ஏ.எல் அமைப்பில் தயாரிக்கப்பட்ட துருவ் வகை ஹெலிகாப்டரை நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவிடம் அளித்தார் பிரதமர் நரேந்திரமோடி.

நேபாள நாட்டுக்கு பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நேபாள ராணுவத்துக்கு இந்தியாவின் தயாரிப்பான இரு, துருவ் ஹெலிகாப்டர்களை வழங்கியது இந்தியா.

Modi hands over Dhrvu to Nepal

இந்நிலையில் சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றுள்ள மோடி, அந்த நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலாவிடம் மேம்படுத்தப்பட்ட இலகுரக துருவ் ஹெலிகாப்டரை ஒப்படைத்தார். இதை அந்த நாட்டு ராணுவம் பயன்படுத்திக்கொள்ள உள்ளது.

இது பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட எச்.ஏ.எல் விமான உற்பத்தி நிறுவன தயாரிப்பாகும். எச்.ஏ.எல் குழு ஒன்று காத்மாண்டுவில் நிலை முகாமிட்டு போதிய தொழில்நுட்ப உதவிகளை செய்து கொடுக்க உள்ளது.

English summary
Prime Minister Narendra Modi handed over an indigenous Advanced Light Helicopter (ALH) Dhruv to Nepal today. Built by Hindustan Aeronautics Limited, the chopper was received by Nepal Prime Minister Sushil Koirala at Kathmandu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X