For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தி இன்டர்வியூ திரைப்பட சர்ச்சை: ஒபாமா ஒரு குரங்கு என விமர்சனம் செய்த வட கொரியா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வடகொரிய அதிபரை கிண்டல் செய்து சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ள 'தி இன்டர்வியூ' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வந்தது.

இந்த படத்தை அமெரிக்காவின் ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்து, சோனி நிறுவனம் வெளியிடுகிறது. 23ம் புலிகேசி திரைப்பட பாணியில், வட கொரிய அதிபரை கேலி செய்கிறது இந்த திரைப்படம்.

N Korea blasts Obama as 'monkey' in threat over movie

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோனி நிறுவனத்தின் இணையதளத்திற்குள் நுழைந்த ஹேக்கர்கள், நிறுவன ஊழியர்களின் தகவல்களையும், புதிய படங்களின் கோப்புகளையும் திருடினர். மேலும், இந்த படம் வெளியானால் தியேட்டர்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கையையும் மீறிதான் தி இன்டர்வியூ படம் ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டுள்ளது. அமெரிக்கா இப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வட கொரியாவில் தொடர்ந்து 9 மணி நேரம், இணையதள சேவை முடங்கியது. இதனால் நாடே ஸ்தம்பித்து போனது.

இந்த முடக்கத்திற்கு அமெரிக்காவின் சதியே காரணம் என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 'வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா. அவரது பேச்சும், செயலும் குரங்கிற்கு ஈடானதுதான்' என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம், அமெரிக்க அதிபரை விமர்சித்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கா-வடகொரியா நடுவே பனிப்போர் சூழ்ந்துள்ள நிலையில், கொரியாவின் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன ரீதியாக அமெரிக்க அதிபர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்று சண்டையை பெரிதுபடுத்த தொடங்கியுள்ளன அமெரிக்க ஊடகங்கள்.

English summary
North Korea today blasted US President Barack Obama as a "monkey" inciting cinemas to screen a comedy featuring a fictional plot to kill its leader, and threatened "inescapable deadly blows" over the movie. The isolated dictatorship's powerful National Defence Commission (NDC) also accused the US of "disturbing the internet operation" of North Korean media outlets
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X