For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவும் கடந்து போகும்?.... நாளை பூமியை கிராஸ் செய்யும் பிரமாண்ட ஆஸ்டிராய்ட்.. உஷாராகும் நாசா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மிகப் பெரிய விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடந்து போகவுள்ளது. இதனால் அபாயம் ஏதும் ஏற்படுமா என்று நாசா விஞ்ஞானிகள் அந்த விண்கல்லை உஷாராக கண்காணித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட பூமியுடன் மோதுவது போல இந்த விண்கல் வருகிறதாம். இது மோதினால், அது எந்த நாட்டில் மோதுகிறோ அந்த நாடே அழிந்து விடும் என்றும் அபாய மணியை ஒலிக்க விட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

கிட்டத்தட்ட 1000 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்டமான அந்த விண்ல்லானது, நமது கிரகத்திற்கு வெகு அருகில் வரவுள்ளதாம். இதனால் பேரழிவு ஏற்படுமா என்ற அச்சம் கிளம்பியுள்ளது.

இந்த விண்கல்லுக்கு 2014-ஒய்பி35 என்று வி்ஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது நாளை பூமியை மணிக்கு 23,000 மைல்கள் வேகத்தில் கடந்து செல்லவுள்ளது.

ஏகப்பட்ட சிறிய விண்கற்கள் இதுபோல பூமியைக் கடந்து செல்வது சகஜம்தான். ஆனால் மிகப் பெரிய அளவிலான விண்கற்கள் கடப்பது என்பது 5000 வருடங்களுக்கு ஒருமுறைதான் நடப்பதாக விண்வெளியிலாளர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை இந்த விண்கல்லானது பூமியின் மீது மோதுவதாக இருந்தால் அதனால் 15,000 மில்லியன் டன் முதல் 15,000 மெகாடன் அளவிலான டிஎன்டி வெடித்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு அபாயகரமாக பாதிப்பு ஏற்படுமாம்.

இந்த விண்கல் எந்தப் பாதையில் பூமியைக் கடக்கும் என்பதையும் நாசா கூறியுள்ளது. இதைப் பார்த்தால் மிக மிக நூலிழையில் பூமி அதனுடன் மோதாமல் தப்புவதைப் பார்க்கலாம்.

இந்த விண்கல் மட்டும் நம் மீது மோதினால் பெரும் வானிலை மாற்றம், நிலநடுக்கங்கள், சுனாமி போன்றவை ஏற்படலாம். அதை விட முக்கியமாக பூமியின் ஒரு பகுதியல், மனித இனத்திற்கே பெரம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

கடந்த 1908ம் ஆண்டு பூமியை ஒரு பெரிய விண்கல் தாக்கியது. சைபீரியாவில் இந்த விண்கல் விழுந்தது. இதனால் 50 மீட்டர் அளவுக்கு மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு பெரும் பாதி்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

இந்த விண்கல் விழுந்ததால் ரஷ்யா முழுவதும் 5 ரிக்டர் அளவிலான அதிர்ச்சி பதிவாகியது. மேலும் நாடு முழுவதும் 8 கோடி மரங்கள் அழிந்தன.

தற்போது நாளை பூமியைக் கடக்கவுள்ள விண்கல்லானது கடைசி நேரத்தில் பூமியை உரசுவதாகஇருந்தால் பெரும் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. அந்த ரிஸ்க்கையும் மறுப்பதற்கில்லை என்று நாசா கூறுகிறது.

English summary
The 1,000-metre wide monster will hurtle terrifyingly close to the planet within days, sparking fears of an unprecedented disaster. The object called ‘2014-YB35’ is almost the same size as Ben Nevis and will skim the Earth on FRIDAY travelling at more than 23,000 mph
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X