For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ஷியன் படத்தில் வந்த இடங்களை நிஜமாகவே படம் பிடித்த நாசா

Google Oneindia Tamil News

நியூயார்க்: தி மார்ஷியன் படத்தில் இடம் பெற்றிருந்த செவ்வாய் கிரக பகுதிகளை நிஜமாகவே படம் பிடித்துள்ளது நாசாவின் மார்ஸ் ஆர்பிட்டர்.

தி மார்ஷியன் என்ற நாவலை மையமாக வைத்து அட்டகாசமான படத்தை எடுத்துள்ளனர் ஹாலிவுட்டில்.

செவ்வாய் கிரகத்தில் போய் சிக்கிக் கொள்ளும் ஒரு விண்வெளி வீரர் குறித்த கதையாகும் இது. இந்தப் படம் பெரும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது.

2 விண்கலங்கள்...

2 விண்கலங்கள்...

தி மார்ஷியன் படத்தில் இரண்டு விண்கலங்களை செவ்வாய்க்கு அனுப்புவதாக காட்சிகள் உள்ளன. அதாவது ஏரெஸ் 3, ஏரெஸ் 4 என்ற விண்கலங்கள் அவை.

ஆச்சர்யம்... ஆனால் உண்மை

ஆச்சர்யம்... ஆனால் உண்மை

இந்த விண்கலங்கள் போய் இறங்கும் காட்சிகளைத் தத்ரூபமாக எடுத்துள்ளனர். தற்போது இந்த விண்கலங்கள் இறங்குவதாக காட்டப்பட்ட இடங்களை நாசாவின் மார்ஸ் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நிஜப்படங்கள்...

நிஜப்படங்கள்...

இந்த இடங்கள் உண்மையிலேயே செவ்வாய் கிரகத்தில் உள்ள பகுதிகள்தான். இவற்றைத்தான் நாவலிலும், படத்திலும் பயன்படுத்தியிருந்தனர். அந்த இடங்களை தற்போது நிஜமாகவே படம் எடுத்துள்ளது மார்ஸ் ஆர்பிட்டர்.

அசிடலியா பிளான்டியா...

அசிடலியா பிளான்டியா...

ஏரேஸ் 3 விண்கலம் இறங்கும் இடத்தின் பெயர் அசிடலியா பிளான்டியா. அதேபோ ஏரேஸ் 4 இறங்கும் இடம் ஷியாபரேல்லி என்ற மலைப் பகுதியாகும்.

ரீகன்னயஸன்ஸ் ஆர்பிட்டர்...

ரீகன்னயஸன்ஸ் ஆர்பிட்டர்...

தற்போது இந்த இரண்டு இடங்களையும் நிஜமாகவே படம் பிடித்துள்ளது நாசாவின் ரீகன்னயஸன்ஸ் ஆர்பிட்டர். அந்தப் படங்களை நாசாவும் வெளியிட்டுள்ளது.

39,000 படங்கள்...

39,000 படங்கள்...

கடந்த 2006ம் ஆண்டு ரீகன்னயஸன்ஸ் விண்கலமானது செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்தது. அதன் பிறகு இதுவரை 39,000 படங்களை அது அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் மழை...

வசூல் மழை...

கடந்த 2 ம் தேதி உலகம் முழுவதும் வெளியான த மார்ஷியன் திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசை ஆட்டிப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் வெளியாவதற்கு சில தினக்களுக்கு முன்னர் தான் நாசாவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் போட்டியில்...

ஆஸ்கர் போட்டியில்...

2015 - 2016ம் ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலிக்கலவை போன்ற 3 பிரிவுகளில் போட்டியிட தகுதி பெற்றிருக்கிறது த மார்ஷியன்.

English summary
Nasa’s Mars orbiter has captured stunning images of the real regions on Mars featured in the best-selling novel and Hollywood movie “The Martian”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X