செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமில்லை - க்யூரியாசிட்டி தகவல்

லண்டன்: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்று க்யூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆண்டு (2012) செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.

செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை ஆய்வு செய்து அதை படமெடுத்து கடந்த 1 ஆண்டாக பூமிக்கு அனுப்பி வருகிறது.

உயிரினங்கள் வாழ மீத்தேன் வாயு அவசியமாகும். அதில்தான் கார்பன், ஹைட்ரஜன், அணுக்கள் உள்ளன. இவையே உயிரினங்கள் வாழ்வதற்கான மூலக்கூறு ஆகும்.

எனவே அங்குள்ள வான் வெளியில் மீத்தேன் வாயு உள்ளதா? என கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டது. ஆனால் மீத்தேன் வாயு இருப்பதை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை 6 தடவை மீத்தேன் குறித்த ஆய்வை கியூரியாசிட்டி மேற் கொண்டது. ஆனால் மீத்தேன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.

இதற்கு முன்பு செவ்வாய் கிரக வான்வெளி மீத்தேன் வாயு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கியூரியாசிட்டி ஆய்வில் 1.3 பங்கு கூட இல்லை என தெரிய வந்துள்ளது.

எனவே செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாகவும், பெரிய ஆறுகள் ஓடியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இதே க்யூரியாசிட்டி அனுப்பிய முந்தைய படங்கள் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

English summary
Nasa's Curiosity Rover revealed that there is no possibility of human survival in Mars.
Please Wait while comments are loading...

Videos