For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த "வண்டில" ஏறினோம்னா... சில மணி நேரத்தில் நிலாவுக்குப் போய் டீ, சமோசா சாப்பிடலாம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புதிய வார்ப் டிரைவ் (Warp Drive) ஒன்றை நாசா சோதனை செய்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வார்ப் டிரைவில் பயணித்தால் சில மணி நேரங்களில் நாம் நிலாவை சென்றடைய முடியும். இந்த வார்ப் டிரைவானது ஒளியை விட வேகமாக செல்லக் கூடியது என்றும் கூறப்படுகிறது.

இதுவரையிலும் இந்த வார்ப் டிரைவ் குறித்து சினிமாக்களிலும் (ஹாலிவுட்), கற்பனைக் கதைகளிலும்தான் நாம் படித்துள்ளோம், பார்த்துள்ளோம். அதாவது இந்த கால எந்திரம் போன்றவற்றில் ஏறிக் கொண்டால் நாம் காலக்ஸி விட்டு வேறு காலக்ஸிக்கும் கூட பறக்க முடியும். ஆனால் இந்த கற்பனை தற்போது உண்மையாகி விடும் போல இருக்கிறது.

அமெரிக்காவின் நாசா இந்த வார்ப் ஒன்றை உருவாக்கி சோதனை செய்து பார்த்துள்ளதாக கூறுகிறாரக்ள். இதன் மூலம் ஒளியை விட அதி வேகத்தில் நாம் விண்ணில் பயணிக்க முடியுமாம்.

Nasa tests 'WARP DRIVE' engine that could carry passengers to the moon in just four hours

சில மணி நேரங்களில் நிலா...

சில மணி நேரங்களில் நாம் நிலவை சென்றடைய முடியுமாம். மேலும் ஒளியை விட அதி வேகமாக இது செல்வதால் விண்வெளியில் பல அரிய சாதனைகளையும், பயணங்களையும் இதன் மூலம் நாம் சாதிக்க முடியும்.

100 ஆண்டுகளில் ஆல்பாசென்டாரி...

மேலும் மிகவும் பிரகாசமான நட்சத்திரமான ஆல்பாசென்டாரியை சென்றடைய தற்போது உள்ளவசதிகளின்படி பத்தாயிரம் வருடங்கள் ஆகும். ஆனால் வார்ப் டிரைவ் மலம் 100 ஆண்டுகளில் அதைச் சென்றடைய முடியுமாம்.

மின் காந்த முறையில்...

மின் காந்த முறையில் இந்த வார்ப் டிரைவ் செயல்படுமாம். மின் சக்தியை இது தூண்டுதல் சக்தியாக மாற்றி செயல்படுத்துகிறது. அதாவது ராக்கெட்களில் தற்போது பயன்படுத்துவது போல எரிபொருள் தேவைப்படாது.

சூரியஒளி மின்சாரம்...

சூரிய சக்தி மூலம் வார்ப் டிரைவுக்குத் தேவையான மின் சக்தியை பெற முடிவதால், சூரிய ஒளி மின்சாரத்தில் இது இயங்கும். எனவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்த புரப்பல்லன்ட்டும் தேவைப்படாது.

சாதிக்க முடியும்...

மேலும் இந்த வார்ப் மூலமாக பல சாதனைகளை நாம் சாதிக்க முடியும். தற்போது உள்ள செயற்கைக் கோள்களை அதை விட பாதி சைசில் நாம் வடிவமைக்க முடியும். மேலும் எரிபொருள் தேவை வெகுவாக குறைந்து விடும். மனிதர்கள் விண்வெளியில் வெகு தூரம் பயணிக்க முடியும்.

நாசாவின் வெற்றி...

இதற்கு முன்பும் கூட வார்ப் டிரைவ் குறித்து ஆய்வுகள் நடந்துள்ளன. சில செயல்முறைகளும் காட்டப்பட்டன. ஆனால் அவை சரிப்பட்டு வரவில்லை. இந்த நிலையில்தான் நாசா இதை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

English summary
Researchers say the new drive could carry passengers and their equipment to the moon in as little as four hours. A trip to Alpha Centauri, which would take tens of thousands of years now, could be reached in just 100 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X