For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவைக் கலக்கும் "தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ" ஸ்டைல் பிரசாரம்!

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரியைப் பார்த்துக் கூறிய நாஸ்டி உமன் என்ற வார்த்தை அங்கு பிரபலமாகி விட்டது. டி சர்ட்டுகளும் சக்கை போடு போடுகின்றன.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவை வித்தியாசமான பிரசாரம் கலக்கி வருகிறது. கூடவே அதில் பிசினஸும் புகுந்து காசு மழையைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. எல்லாம் நம்ம ஊர் ஸ்டைல் பிரசாரம் + பிசினஸ்தான்.

டிரம்ப் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை வைத்துத்தான் இப்போது பிசினஸில் கல்லா கட்டி கொண்டிருக்கிறார்கள் பலர். அவர் ஹிலரி கிளிண்டனை நாஸ்டி உமன் என்று திட்டப் போக அதை அப்படியே தங்களுக்கு ஆதரவாக திருப்பி விட்டனர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்.

Nasty Woman vote என்ற பெயரில் டி சர்ட்டுகளை தயாரித்து வெளியிட்டு, அதை அணிந்து கொண்டு ஹிலரிக்கு ஆதரவாக பிரசாரம் களை கட்டியுள்ளது. இந்த டி சர்ட்டுகளுக்கு பெண்கள் மத்தியில் பெருத்த ஆதரவும் கிடைத்திருப்பதால் இந்த டி சர்ட் தயாரிப்பு பிசினஸும் பிக்கப் ஆகியுள்ளதாம்.

கேத்தி பெர்ரி

கேத்தி பெர்ரி

சமீபத்தில் ஹிலரியின் ஆதரவாளரும், பாப் பாடகியுமான கேத்தி பெர்ரி நாஸ்டி உமன் டிசர்ட் அணிந்து கொண்டு நெவேதா பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவிகளைச் சந்தித்து ஹிலரிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அங்குள்ள விடுதிக்குப் போன அவர் ஒவ்வொரு அறையாகப் போய் மாணவிகளிடம் வாக்கு சேகரித்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

 நாஸ்டி உமனுக்கு நல்ல வரவேற்பு

நாஸ்டி உமனுக்கு நல்ல வரவேற்பு

கேத்தி பெர்ரி போட்டிருந்த நாஸ்டி உமன் வாசகம் அடங்கிய டி சர்ட் மாணவிகளை வெகுவாகக் கவர்ந்து விட்டதாம். நாங்களும் இதேபோல போடப் போகிறோம் என்று பல மாணவிகள் பெர்ரியிடமே தெரிவித்துள்ளனர். அப்படியே ஓட்டை ஹிலரிக்குப் போட்டுருங்க என்று அவர்களிடம் பெர்ரி கேட்டுக் கொண்டாராம்.

பெண்கள் ஆதரவு குவிகிறது

இதற்கிடையே ஹிலரிக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறதாம். அதிலும் நாஸ்டி உமன் டி சர்ட்டுடன் வலம் வரும் பெண்களும் அதிகரித்து விட்டனராம். பலரும் இந்த டி சர்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளதால் இந்த பிசினஸும் நல்ல லாபம் தந்து வருகிறதாம்.

 விதம் விதமான நாஸ்டி

விதம் விதமான நாஸ்டி

நாஸ்டி உமன் என்று மட்டும் இல்லாமல் சச் எ நாஸ்டி உமன் என்பது உள்பட விதம் விதமான வார்த்தைகளைப் போட்டு டி சர்ட் தயாரிக்கிறார்களாம். நாஸ்டி என்ற வார்த்தையை மட்டும் போட்டும் டி சர்ட் வருகிறதாம். டி சர்ட்டில் நாஸ்டி என்று இருந்தாலே அது விற்பனையாகி விடுகிறதாம்.

 ஆரம்பித்து வைத்த பாய்ட்

ஆரம்பித்து வைத்த பாய்ட்

உண்மையில் வாஷிங்டனைச் சேர்ந்த எரின் பாயிட் என்ற பெண்மணிதான் இதை ஆரம்பித்து வைத்தார். டிவியில் டிபேட் பார்த்துக் கொண்டிருந்த அவர் டிரம்ப், சச் எ நாஸ்டி உமன் என்று ஹிலரியைப் பார்த்துக் கூறியைக் கேட்டு சட்டென்று அந்த வாசகத்தைப் போட்டு ஒரு டிசர்ட்டைத் தயாரித்து நெட்டில் வெளியிட்டார். உடனே அவருக்கு ஆர்டர்கள் வந்து குவிந்து விட்டனவாம் அப்படியே இது பரவி இப்போது பெரிய பிசினஸாக மாறி விட்டது.

 த்தூ.. தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ

த்தூ.. தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ

தமிழகத்தில் இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களைப் பார்த்து த்தூ, தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ என்று திட்டினார். உடனே அதை டிசர்ட்டில் இடம் பெற வைத்து பிசினஸாக்கி கலக்கினர். தற்போது அதே பாணியில் பெண்களைத் திட்டி டிரம்ப் கூறிய வார்த்தையை வைத்து பிசினஸாக்கி விட்டனர்.

இனி திட்டினால் டிசர்ட்டில் இடம் பெறும் வகையில் திட்டு என்று புதுமொழி பிறந்து விடும் போலயே!

English summary
Nasty woman, Such a Nasty woman are doing very good business in US after the Republican candidate Trump called his Democratic rival Hillary as " such a nasty woman" during a debate. After hearing this an US woman printed these words in T shirts and selling it like hot cake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X