For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலநடுக்கத்தால் பரிதவிக்கும் நேபாள மக்களுக்கு இதெல்லாம் உடனடியாக தேவை....!

Google Oneindia Tamil News

காத்மாண்ட்: நிலநடுக்கத்தால் உறவுகளை இழந்து, தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் வாடும் நேபாள மக்கள் சுத்தமான குடிதண்ணீர், குளிரில் இருந்து காத்துக் கொள்ள பெட்ஷீட் போன்றவைகள் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Nepal in urgent need of medecine, food and water

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழமைவாய்ந்த கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது.

மழை உள்ளிட்ட காரணங்களால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் உறவுகளைப் பறி கொடுத்து வீடுகளை இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் உடனடித் தேவைகள் குறித்து அங்கு மீட்புப் பணியில் உள்ளவர்கள் சிலர் டுவிட்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதோ அவற்றின் விபரமாவது:-

பொதுவான உடனடித் தேவைகள்:

* சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் மற்றும் குளோரின் மாத்திரைகள்

* உடனடி உணவு மற்றும் கைதேர்ந்த மருத்துவர்கள்

* குளிரைத் தாங்கும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் கூடாரம்

* சடலங்களை வைக்கும் பைகள்

* நேப்கின் உள்ளிட்ட சானிடரி பொருட்கள்

* டார்ச் லைட்டுகள்

மருத்துவம் சார்ந்த தேவைகள்:

* அவசர கால மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

* முதலுதவி மருந்துகள்

* சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கான மருந்துகள்

* ஐ.வி புளூயிட்ஸ்

* ஐவி ஆண்டி பயாடிக்ஸ்

தேவைப்படும் மருத்துவர்கள் :

* எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்
* இதய சிகிச்சை நிபுணர்கள்
* அவசர கால சிகிச்சை நிபுணர்கள்
* செவிலியர்கள்

English summary
The death toll in Nepal surpassed 2,500 just a day after a 7.9-magnitude earthquake ripped through parts of the country. "There is an urgent need for fresh water, food items and shelter," says the trapped persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X