For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெயினின் "லா டொமாட்டினா” ஸ்டார்ட்ஸ்- தக்காளித் திருவிழாவை டூடுளில் கொண்டாடும் கூகுள்!

Google Oneindia Tamil News

பியுனோல்: தக்காளி... எந்த காய்கறி விலை ஏறினாலும் எப்போதும் குறைந்த விலையில் கிடைக்கும் "ஏழைகளின் ஆப்பிள்" இது.

அப்படிப்பட்ட தக்காளியின் விளைச்சலை கோலகலமாகக் கொண்டாடும் திருவிழாதான் ஸ்பெயினின் "லா டொமாட்டினா".

அதாவது தக்காளி திருவிழா...இந்த விழாவின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகின்றது. தக்காளித் திருவிழாவினையொட்டி ஒரு கலகலப்பான "கூகுள் டூடுள்" ஒன்றினை தனது முகப்புப் பக்கத்தில் பதித்துள்ளது கூகுள்.

கலக்கும் கார்ட்டூன் டூடுள்:

கலக்கும் கார்ட்டூன் டூடுள்:

அழகான இந்த டூடுளில் கிட்டதட்ட ஐந்தாறு பேர் தக்காளியை வீசி விளையாடுவது போல கார்ட்டூன் காட்சியாக வடிவமைத்து அனைவரையும் ரசித்துச் சிரிக்க வைத்துள்ளது.

தக்காளிச் சண்டை:

தக்காளிச் சண்டை:

ஸ்பெயின் நாட்டின் பியுனோல் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவின் தக்காளி சண்டை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்.

தெருக்கள் எல்லாம் தக்காளிக் கூழ்:

தெருக்கள் எல்லாம் தக்காளிக் கூழ்:

சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த ஆதரவைப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்து விளையாடும் தக்காளிகளால் தெரு முழுவதும் தக்காளிக் கூழினால் சிவந்து காணப்படும்.

மீண்டும் ஆரம்பித்த மக்கள்:

மீண்டும் ஆரம்பித்த மக்கள்:

இந்த நகரத்தைச் சேர்ந்த 20,000 மக்கள் தங்களின் நகர நிர்வாகத்துக்கு இருந்த 5.5 மில்லியன் யுரோ கடனை அடைப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் இத்தகைய ஏற்பாட்டைத் தொடங்கினர்.

விளைச்சலால் தொடங்கிய திருவிழா:

விளைச்சலால் தொடங்கிய திருவிழா:

கடந்த 1945ஆம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த உள்ளூர்க் குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசியெறிந்து சண்டையிட்டுக் கொண்டதைக் கண்டே இத்தகையதொரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே டூடுள் போட்டு கொண்டாடி வருகின்றது கூகுள்.

English summary
Once every year, for about an hour on the last Wednesday of August, thousands of people descend on the town of Buñol in eastern Spain to pelt each other with tomatoes as part of La Tomatina festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X