For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான தனி சலூன் நடத்தும் அமெரிக்க திருநங்கை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க் நகரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நட்புறவான ஒரு முடி திருத்தனராக வலம் வருகிறார் 43 வயதான கானே குட்ஸ்வெல் என்ற திருநங்கை. இவரிடம் தற்போது ஓரினச் சேர்க்கையாளர்கள் குறிப்பாக பெண்கள் பலர் ஆர்வத்துடன் வந்து முடி திருத்தம் செய்து கொள்கின்றனராம்.

22 வயதுான அயன்னா நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. இவர் ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்டவர். இவர் வழக்கமாக ஒரு சலூனுக்கு முடி திருத்தம் செய்யப் போவார். அந்த முடிதிருத்துனருக்கு அயன்னா குறித்து தெரியும். இதனால் அவர் தேவையில்லாமல் சீண்டுவார், இரு பொருள் படப் பேசுவார். இதனால் முடி திருத்தம் செய்யப் போகவே பிடிக்காமல் அயன்னா தவித்து வந்தார். இந்த நிலையில்தான் தற்செயலாக குட்ஸ்வெல்லை அவர் சந்தித்தார்.

ஓரினச் சேர்க்கையாளர்களு மதித்து முடி திருத்தம் செய்யக்கூடிய பார்பர்கள் கிடைப்பார்களா என்று ஆன்லைனில் தேடியபோதுதான் குட்ஸ்வெல் அவருக்குக் கிடைத்தார்.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும்...

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும்...

2007ம் ஆண்டிலிருந்து முடி திருத்துனராக இருந்து வருகிறார் குட்ஸ்வெல். இவர் இதை தொழிலாக கடை வைத்து செய்யவில்லை. மாறாக தனது அபார்ட்மென்ட்டிலேயே செய்து வருகிறார். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டுமே இவர் செய்கிறார் என்பது விசேஷமானது.

நண்பர்களின் சங்கடம்...

நண்பர்களின் சங்கடம்...

இவருடைய ஓரினச்சேர்க்கை நண்பர்கள் தாங்கள் சந்தித்த சங்கடங்களை இவர் கூறியபோதுதான் இவருக்கு ஏன் நாமே சலூன் வேலையில் ஈடுபடக் கூடாது என்று தோன்றியுள்ளது. உடனடியாக அதை செயல்படுத்தவும் களம் இறங்கி விட்டார். 2007ம் ஆண்டு முதல் இதை அவர் செய்து வருகிறார்.

வாடிக்கையாளர்கள்...

வாடிக்கையாளர்கள்...

ப்ரூக்ளினில் உள்ள தனது வீட்டிலிருந்தபடி இதைச் செய்து வருகிறார் குட்ஸ்வெல். அயன்னா போல பலர் இவருக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். எந்தவிதமான அசவுகரியமும், சங்கடமும், இரு பொருள் பேச்சும் இல்லாமல் குட்ஸ்வெல்லிடம் முடிதிருத்தம் செய்து கொள்கிறார்கள்.

ஆண்கள் போன்று...

ஆண்கள் போன்று...

பல ஓரினச் சேர்கைக பழக்கம் கொண்ட பெண்களுக்கு ஆண்களைப் போன்று முடி திருத்தம் செய்ய ஆசை இருக்கும். அவர்கள் அதை வழக்கமான சலூன் கடைகளில் செய்யப் போகும்போது தேவையில்லாத பேச்சுக்களைக் கேட்க நேரிடுகிறது அந்தக் கஷ்டம் குட்ஸ்வெல்லிடம் இருப்பதில்லை.

விரைவில் தனிக்கடை...

விரைவில் தனிக்கடை...

தற்போது அவர் தனியாக ஒரு சலூன் கடையை ஆரம்பிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம். இதற்கான இடம் தேடி வருகிறார். கிடைத்ததும் கடை விரிக்கப் போகிறாராம். தற்போது தனது வீட்டின் ஒரு அறையை சலூனாக மாற்றியுள்ளார் குட்ஸ்வெல். அங்கு பார்பர் கடை சேர், உள்ளிட்டவை உள்ளன.

டொபாகோவில் பிறந்தவர்...

டொபாகோவில் பிறந்தவர்...

டிரிடினாட் - டொபாகோவில் பிறந்தவர் குட்ஸ்வெல். சிறு குழந்தையாக இருந்தபோது தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர் நியூயார்க்கில் செட்டிலாகி விட்டார்.

ஆண் உணர்வு...

ஆண் உணர்வு...

இவருக்கு இளம் பிராயத்திலேயே ஆண் மற்றும் பெண் என இருவகை உணர்வும் இருந்திருக்கிறது. அதை அவர் மறைக்க விரும்பவில்ல. அவரது குடும்பத்தினரும் அதை மதித்து அவரது விருப்பப்படி வாழ உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kutzwell, 43, started cutting hair in 2007, after many of her friends in the LGBT community complained about how difficult, and at times unpleasant, it was to get a haircut at their local barbershop if one didn't conform to gender norms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X