For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைஜீரியா டமாடுரு நகரில் மனித வெடிகுண்டு தாக்குதல்- 16 பேர் பலி; 47 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

கானா: நைஜீரியா நாட்டில் டமாடுரு நகரிலுள்ள மார்க்கெட் ஒன்றில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு எதிராக நைஜீரியாவில் பள்ளிகள், சந்தைகள், ராணுவ மையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களைக் குறிவைத்து போகோ ஹராம் அமைப்பினர் தாக்குதல் நடத்துதல் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகின்றன.

Nigeria Boko Haram crisis: Child bomber hits Damaturu

இந்நிலையில் மீண்டும் அங்குள்ள டாமடுரு நகர் மார்க்கெட் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மனநிலை பாதிக்கப்பட்ட 10 வயதான சிறுமியை மனிதவெடிகுண்டாக தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 16க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களுள் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 47 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டமாடுரு நகரில் கடந்த 18 ஆம் தேதி நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A girl aged about 10 has carried out a suicide bombing in north-eastern Nigeria, killing at least 16 people, police say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X