For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருந்தாலும் இந்த அடகோயா தாத்தாவுக்கு ரொம்பத்தான் குசும்பு...!

Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியாவில் பசித்த வேளைகளில் சரிவர உணவு தரவில்லை எனக் கூறி, தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் 57 வயது தாத்தா ஒருவர்.

நைஜீரியாவைச் சேர்ந்தவர் ஒலுபேத் அடகோயா (57). இவர் தனது மனைவியை சமீபத்தில் ராஜீனாமா செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம் வித்தியாசமானது.

Nigerian granted divorce over wife's late meals

அதாவது, தான் மிகவும் பசித்து, களைப்புடன் சாப்பிட்ட வரும்போதெல்லாம் தனது மனைவி வெகுநேரம் கழித்து உணவளித்தாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை ஒலுபேத்தின் மனைவி மறுத்துள்ளார். தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும், அதனாலேயே பொய்க் காரணம் கூறி தன்னை விவாகரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அந்தத் தம்பதி தற்போது விவாகரத்து மூலம் பிரிந்து விட்டனர்.

நைஜீரியாவில் இது போன்று வித்தியாசமான விவாகரத்துகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.

கடந்த 2008-ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியதாரர் தனது 86 மனைவியரில் 82 பேரை "அட் ஏ டைமில்" விவாகரத்து செய்து, அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.

இதேபோல், இன்னொரு வழக்கில், திருமணம் முடித்த சில மணி நேரங்களில் 32 வயது வியாபாரி தனது மனைவியை விவாகரத்து செய்தார். காரணம், அவரது மனைவி தனது பின்னழகை நேர்த்தியாக காண்பிப்பதற்காக கூடுதலாக ‘ஷேப்பிங்' உபகரணம் அணிந்திருந்தது தான்.

இந்த 40 வயது கணவர் தனது விவாகரத்திற்காக கூறிய காரணம், ரொம்ப ரொம்ப விசித்திரமானது. அதாவது, ‘எனது மனைவியை திருமணம் செய்த ஐந்து ஆண்டுகளாக நான் அடிக்க நினைக்கும்போதெல்லாம், அவளது குடும்பத்தார் வந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்' எனக் கூறி விவாகரத்து பெற்றுள்ளார்.

அட போங்கப்பா, மார்ஸுக்குப் போயிட்டாங்க.. ப்ளூட்டோவுக்கும் போயிட்டாங்க.. இன்னும் இப்படி இருக்கீங்களே!

English summary
A Nigerian court has recently granted a 57-year-old man a divorce on the premise that his wife was bringing him his meals too late at night, local media reported on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X