For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எக்ஸ்கியூஸ் மீ ஒன்லி 3 குண்டுகள்தான்.. ஒட்டுமொத்த உலகத்துக்கும் சங்குதான்.. பீதி கிளப்பும் வடகொரியா!

வடகொரியாவிடம் தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் இருப்பதாக அந்நாட்டின் கவுரவ குடிமகனும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியுமான பெனோஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

அர்ஜென்டினா: வடகொரியாவிடம் தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் இருப்பதாக அந்நாட்டின் கவுரவ குடிமகனும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியுமான பெனோஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 குண்டுகளை போட்டாலே போதும் உலகமே அழிந்துவிடும் என்று கூறிய அவர், உலக நாடுகள் வடகொரியாவை சீண்ட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனால் அமெரிக்கா தனது போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை அறிந்த வடகொரியா அமெரிக்காவின் விமான தாங்கி கப்பலை தங்களால் வீழ்த்த முடியும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஸ்பேயின் நாட்டைச் சேர்ந்தவரும் வடகொரியாவின் கவுரவ குடிமகனாகிய அலிஜாண்ட்ரோ கவோடி பெனோஸ் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

உலகை அழிக்கும் குண்டுகள்

உலகை அழிக்கும் குண்டுகள்

அப்போது வடகொரியாவை யாரும் சீண்ட வேண்டாம் என்றும், அவ்வாறு சீண்டினால் உலகை அழிக்கும் குண்டுகள் அவர்களிடம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பெனோஸ் வடகொரியாவின் கவுரவ குடிமகன் என்றும் மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார உறவு வைத்திருக்கும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதி மற்றும் வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வமற்ற தூதர் என்றும் கூறப்படுகிறது.

ஏவுகணைகள் மூலம் பாதுகாப்பு

ஏவுகணைகள் மூலம் பாதுகாப்பு

யாரும் வடகொரியாவை சீண்ட வேண்டாம் என்றும் அவர்களை தொட்டால் துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் மூலம் அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வார்கள் என்றும் பெனோஸ் தெரிவித்துள்ளார்.

போரிட நேர்ந்தால் இழப்பு நேரிடும்

போரிட நேர்ந்தால் இழப்பு நேரிடும்

மேலும் சீனா, அமெரிக்காவுடன் இணைந்து போரிட நேர்ந்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார்.
கிம் ஜாங் கடந்த 2012- ஆம் ஆண்டிலிருந்த தனது அணு ஆயுதவலிமையை பலப்படுத்தி வருவதாகவும், வடகொரிய மக்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.

3 தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் போதும்

3 தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் போதும்

இதனால் வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறினால் உங்களுக்குத் தான் இழப்பு என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களிடம் தெர்மோநியூக்ளியர் குண்டு இருக்கிறது, அதில் மூன்று குண்டுகள் போட்டால் போதும் உலகமே அழிந்து விடும் என்று கூறியுள்ளார்.

English summary
North Korea could destroy the entire world with just three or four thermonuclear bombs, according to a man who styles himself as an international representative of the regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X