ரேன்சம்வேர் வைரஸ் மூலம் சைபர் கிரைம் அட்டாக் நடத்தியது நம்ம குழந்தைச்சாமியாமே..!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரேன்சம்வேர் வைரஸ் மூலம் உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தது வடகொரியாதான் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அணு ஆயுதம் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா தற்போது சைபர் க்ரைம் அட்டாக்கிலும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ரேன்சம்வேர் வைரஸ் திறக்கும் போது கணினியின் தகவல்கள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்வதோடு, 300 டாலர்கள் முதல் 600 டாலர்கள் வரை டிஜிட்டல் பணம் எனப்படும் பிட்காயின் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

பணம் கொடுத்தால் மட்டுமே தகவல்கள் மீண்டும் விடுவிக்கப்படும். இந்த ஹேக்கர் வைரஸ் மூலம் இதுவரை 150 நாடுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆலோசிக்கும் நாடுகள்

இதனால் இந்தியா உட்பட வங்கதேசம் மற்றும் அமரிக்க, ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

வடகொரியாவின் சதி

இந்நிலையில் இந்த ரேன்சம்வேர் வைரஸ் மூலம் நாடு முழுவதும் சைபர் கிரைம் மூலம் தாக்குதல் நடத்தியது வடகொரியாதான் என தெரியவந்துள்ளது. இதனை அமெரிக்காவின் கேஸ்பர்ஸ்கி உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன.

போர் பதற்றம்..

தடையை மீறி அடிக்கடி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என உலக நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் வடகொரியாவின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் போர்க்கப்பலும் கொரிய தீபகற்பத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

முடக்கத் திட்டம்

இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளை முடக்கும் வகையில் வடகொரியா சைபர் கிரைம் அட்டாக்கில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணுஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தல்

ஏற்கனவே உலக நாடுகளை தனது அணுஆயுத ஆய்வின் மூலம் அச்சுறுத்தி வருகிறது. ரேன்சம்வேர் வைரஸால் சோனி நிறுவனம் மற்றும் தென்கொரிய வங்கிகள் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Security researchers have found digital clues in the malware used in last weekend's global ransomware attack that might indicate North Korea is involved.
Please Wait while comments are loading...