For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிம் ஜாங் உன் முன் சீரில்லாமல் உட்கார்ந்திருந்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட வட கொரிய துணை பிரதமர்!

Google Oneindia Tamil News

பியாங்யாங்: வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னை அவமதிக்கும் வகையில் உட்கார்ந்திருந்ததாக வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடகொரியாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்நாட்டின் சர்வாதிகரியான கிம் ஜாங் உன் கூறிய வார்த்தைகளை கேட்டு நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் ஹவாங் மின் மற்றும் கல்வித்துறை அமைச்சக மூத்த அதிகாரி ரி யாங் ஜின் ஆகியோர் சமீபத்தில் கொல்லப்பட்டனர்.

North Korea killed a Deputy Premier, Seoul Reports

இருவருரையும் பொது இடத்தில் வைத்து விமானத்தை சுட்டுத் தள்ளக்கூடிய துப்பாக்கியைப் பயன்படுத்தி கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த செய்தி வெளியான சுவடு மறைவதற்குள், கிம் ஜாங் உன்னை அவமதித்ததாக கூறி வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் கொல்லப்பட்டார்
என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை அந்த நாட்டு அமைச்சகம் ஒன்றின் செய்தி தொடர்பாளர் ஜாங் ஜூன் ஹீ வெளியிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. கிம் ஜாங் உன் கலந்து கொண்ட நாடாளுமன்ற கூட்டத்தின்போது, துணை பிரதமர் கிம் யாங் ஜின் மோசமான நிலையில் உட்கார்ந்திருந்து, நாட்டின் தலைவருக்கு அவமரியாதை தந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அவர் தூங்கி விழுந்ததாக மற்றொரு தகவல் கூறுகிறது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால் அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
North Korea has executed a vice premier for showing disrespect during a meeting presided over by leader Kim Jong-Un, South Korea said Wednesday, after reports that he fell asleep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X