For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்ரம்ப்க்கு மனநலம் சரியில்லை.. விளாசித் தள்ளும் குழந்தைசாமி!

அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியாவிற்கு மிரட்டல் விடுத்து வரும் அதிபர் ட்ரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ப்யோங்கியாங் : வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அதிபர் ட்ரம்ப்பை மனநலம் இல்லாதவர் என்று கிம் ஜாங் உன் விமர்சித்துள்ளார்.

வடகொரியா தொடர் அணுஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன்காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பல வழியில் மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவருகிறது.

இந்நிலையில், ஐ.நா. பொதுசபையில் கடந்த 19-ம் தேதி முதல்முறையாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அழிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ராக்கெட் மனிதர் போல செயல்படுகிறார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

 நாய் போல குரைக்கிறார்

நாய் போல குரைக்கிறார்

டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைகள் குறித்து பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ, ட்ரம்ப்பின் பேச்சை சுட்டக்காட்டி 'நாய் குரைப்பதை போல் எங்களை சத்தமிட்டு மிரட்டலாம் என அவர் நினைப்பது நாயின் கனவு போன்றது', என கூறியிருந்தார்.

 கிம் ஜாங் பதில்

கிம் ஜாங் பதில்

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் வடகொரியாவை அழித்து விடுவேன் என்று ஐநா மன்றத்தில் உலகநாடுகள் முன்னிலையில் பேசிய பேச்சுக்கு கிம் ஜாங் கண்டனம் தெரிவித்து ஐநாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ட்ரம்ப் வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் நன்கு யோசித்து பார்க்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் அரசியல்வாதி போல பேசக் கூடாது.

ஜநாவிற்கு அறிக்கை

அவர் பேசுவது ஐநா பொதுமன்றத்தில், என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். ஒரு நாட்டை ஆளும் தகுதி அவருக்குக் கிடையாது அரசியல்வாதி என்பதை விட கேங்ஸ்டர் போலத் தான் அவர் செயல்படுகிறார். என்னையும் எனது நாட்டையும் உலக நாடுகள் முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டார்.

 மனநலம் சரியில்லை

மனநலம் சரியில்லை

ட்ரம்ப் என்ன எதிர்பார்க்கிறாரோ அதற்கான பலன்களை அவரே அனுபவிப்பார். நான் நிச்சயமாகச் சொல்வேன் அவருக்கு மனநலம் சரியில்லை என்று கிம் ஜாங் அதிபர் ட்ரம்ப் குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

 அடுத்த அணுகுண்டு சோதனை

அடுத்த அணுகுண்டு சோதனை

இதனிடையே ட்ரம்ப்பின் எச்சரிக்கும் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர். நியூயார்க்கில் செய்தியாளர்களிட்ம் பேசிய அவர் பசிபிக் கடல் பகுதியில் சக்திவாய்ந்த ஹைட்ரோஜன் அணுகுண்டு சோதனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

English summary
North Korean leader Kim Jong Un made an unprecedented televised statement, accusing Trump of being mentally deranged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X