For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"வீட்டை" விட்டு முதல் முறையாக வெளியே வருகிறார் "கொழந்தசாமி".. ரஷ்யா போகிறார்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: 2011ம் ஆண்டு வட கொரியா அதிபராக பதவிக்கு வந்தது முதல் வட கொரியாவை விட்டு வெளியே வராமல் இருந்து வரும் சர்வாதிகாரி கிம் ஜோங் உன், முதல் முறையாக ஒரு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். வருகிற மே மாதம் அவர் ரஷ்யாவுக்குப் போகவுள்ளார்.

இந்தத் தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வட கொரிய அதிபராக இதுதான் கிம்முக்கு முதல் வெளிநாட்டுப் பயணமாகும். இந்தத் தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உலக அளவில் வட கொரியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், ரஷ்யா மட்டுமே வடகொரியாவை முழுமையாக தாங்கிப் பிடித்து வருகிறது. வட கொரியா முழுமையாக நம்புவதும் ரஷ்யாவை மட்டுமே.

North Korean Leader to Visit Russia in May

இதுகுறித்து பெஸ்கோவ் கூறுகையில், வட கொரிய தலைவரின் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரை வரவேற்க நாங்கள் தயாராகி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

மே 9ம் தேதி கி்ம் மாஸ்கோ வரவுள்ளாராம். இருப்பினும் இதுகுறித்து வட கொரியா தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. மே 9ம் தேதி, நாஜி ஜெர்மனியை ரஷ்யா வீழ்த்தியதன் 70வது ஆண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவைப் பொறுத்தவரை தற்போதைக்கு அது ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமே நம்பியுள்ளது. வட கொரியாவை முடக்கத் துடிக்கும் அமெரிக்கா தலைமையிலான அணி மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையின் நெருக்கடியிலிருந்து மீள இந்த இரு நாடுகள் மட்டுமே வட கொரியாவுக்குக் கை கொடுத்து வருகின்றன.

வட கொரியாவில் சீனாதான் அதிக அளவிலான முதலீடுகளை செய்துள்ளது. ரஷ்யாவும் கணிசமான அளவில் முதலீடுகளைச் செய்துள்ளது.

ரஷ்யாவின் நிலை என்னவென்றால், மேற்கத்திய நாடுகளுடான அதன் உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே ஆசிய அளவில் அது ஆதரவைத் திரட்டத் தொடங்கியுள்ளது.

2011ம் ஆண்டு வட கொரியாவின் அதிபராக கிம் உட்கார்ந்தார். அதன் பின்னர் அவர் வட கொரியாவை விட்டு வெளியே எங்குமே வந்ததில்லை. வட கொரியாவுக்கும் கூட சர்வதேச தலைவர்கள் பெரிய அளவில் யாரும் போனதில்லை.

இதற்கிடையே மே 9ம் தேதி விழாவில் 20 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அடக்கமா என்பது தெரியவில்லை. அதேபோல தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை வருவாரா என்பதும் தெரியவில்லை.

கிம்மை வரவைத்து அவரையும், அமெரிக்கா மற்றும் தென் கொரிய தலைவர்களையும் பேச வைக்கும் திட்டத்தில் ரஷ்யா உள்ளதா என்பதும் தெரியவில்லை.

English summary
North Korea’s leader, Kim Jong-un, plans to visit Moscow this May in his first trip abroad since assuming power in 2011, a Kremlin spokesman announced on Wednesday. The announcement from the spokesman, Dmitri S. Peskov, came amid a strengthening in ties between the two countries, even as North Korea remains isolated and has seen a chill in relations with its closest ally, China.“The North Korean leader’s participation has been confirmed, and we are getting ready for his arrival,” Mr. Peskov said in remarks carried by the Interfax news agency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X