For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”ஏ கூகுள், என் போன் கக்கூஸ்ல விழுந்திருச்சான்னு பாரேன்” – தொலைந்த போனைக் கண்டறிய புதிய ஆப்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும்.

கூகுள் நிறுவனம் மிகத்திறமை வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில்நுட்ப உலகில் களம் இறங்கியது.

அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது.

கூகுளில் தேடிக் கண்டுபிடி:

கூகுளில் தேடிக் கண்டுபிடி:

தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற சாதனங்களில் தகவல் பதிவு:

மற்ற சாதனங்களில் தகவல் பதிவு:

இதற்கென பிரத்யேகமாக ஒரு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக்கொண்டு அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லட், கணினி ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும்.

கண்டுபிடிக்க இனி எளிது:

கண்டுபிடிக்க இனி எளிது:

பின்னர் எப்போதாவது போன், கணினியை வைத்த இடம் மறந்துபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ அவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம்.

ஃபைன்ட் மை போன்:

ஃபைன்ட் மை போன்:

இதற்கு இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழக்கமாக கூகுள் தேடல் பக்கத்தில் "ஃபைன்ட் மை போன்" (Find my phone) என்று தட்டச்சு செய்தால் போதும், உடனே ஒரு வரைபட திரை உருவாகும்.

உடனடியாக திரையில் தெரியும்:

உடனடியாக திரையில் தெரியும்:

அதில் தொலைந்த ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சில வினாடிகளில் திரையில் காட்டப்படும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது காட்டப்பட்டு விடும்.

தகவல்களை அழிக்கவும் செய்யலாம்:

தகவல்களை அழிக்கவும் செய்யலாம்:

ஒருவேளை உங்கள் பொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் "ரிங்" என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் செய்யலாம்.

ஆப்பிளில் ஆல்ரெடி உண்டு:

ஆப்பிளில் ஆல்ரெடி உண்டு:

ஆப்பிள் ஐபோன் ஏற்கனவே இதுபோன்ற சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Are you one of those who are afraid of losing or misplacing your Smartphone? It is obvious that we all love our Smartphone and we don’t want to lose it in any case. And we thought Google, the search engine, can find anything only online, but the recent advance from Google can find your lost phone too, reports TheNextWeb.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X