For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 மணிநேரத்தில் 10 லட்சம் ஃபாலோயர்கள்: கின்னஸ் சாதனை படைத்த ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ட்விட்டரில் சேர்ந்த 5 மணிநேரத்திற்குள் 10 லட்சம் ஃபாலோயர்களை பெற்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த 18ம் தேதி மீண்டும் ட்விட்டரில் கணக்கு துவங்கினார். @POTUS என்ற பெயரில் கணக்கு துவங்கிய அவரை தற்போது 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

கணக்கு துவங்கியதில் இருந்து இதுவரை அவர் 3 முறை ட்வீட் செய்துள்ளார்.

ஃபாலோயர்கள்

ஃபாலோயர்கள்

ஒபாமா ட்விட்டரில் கணக்கு துவங்கிய 5 மணிநேரத்திற்குள் அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது. இதன் மூலம் ஒபாமா புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ராபர்ட் டவ்னி ஜூனியர்

ராபர்ட் டவ்னி ஜூனியர்

அயர்ன் மேன் நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியர் ட்விட்டரில் சேர்ந்த 23 மணிநேரம் 22 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோயர்களை பெற்றது தான் கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஒபாமா முறியடித்துள்ளார்.

கின்னஸ்

கின்னஸ்

ட்விட்டரில் கணக்கு துவங்கிய வேகத்தில் யார், யாருக்கு அதிக ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். ட்விட்டரில் கணக்கு துவங்கிய 5 மணிநேரத்திற்குள் 10 லட்சம் ஃபாலோயர்களை பெற்றதன் மூலம் ஒபாமா புதிய சாதனை படைத்துள்ளார் என்று கின்னஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா

ஒபாமா

ஒபாமா தனது ட்விட்டர் கணக்கில் தன்னை பற்றி எழுதியிருப்பதாவது, தந்தை, கணவர் மற்றும் அமெரிக்காவின் 44வது அதிபர் என்பது ஆகும். @POTUS என்பது ஒபாமாவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு அல்ல.

English summary
US president Obama has set a new guinness record by becoming the fastest person to get 10 million followers on twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X