For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு? ரஷ்யா மீது விசாரணை நடத்த ஒபாமா உத்தரவு!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹேக்கர்கள் மூலம் அமெரிக்க சர்வர்களை தாக்குதல் நடத்தியதாகவும், பொய்ச் செய்திகளைப் பரப்பியதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டுகள் எழும்பின.

ட்ரம்ப் தவிர அனைத்துக் கட்சியினரும் ரஷ்யாவின் தலையீட்டைக் கண்டித்தனர்.இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

Obama orders to probe Russia's conspiracy in US election

அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் ஜனவரி 20 வரை இருக்கிறது. அதுவரையிலும் அதிபர் அதிகாரத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை அவர் எடுக்க முடியும்.

அதற்கு முன்னதாக, ரஷ்யா மீது விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று புலனாய்வுத் துறையினருக்கு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் புலனாய்வுத் துறையினர், அடுத்து வரப்போகும் அதிபர் ட்ரம்ப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் தவிப்பதாக தெரிகிறது.

ட்ரம்ப் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தவர், மேலும் ரஷ்யாவுடனும், அதிபர் புட்டினுடனும் நல்லுறவை விரும்புபவர் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றாகும்.

அதே சமயத்தில் குடியரசுக் கட்சியின் செனட் அவை மூத்த உறுப்பினர் ஜான் மெக்கய்ன், ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படவும் தயார் என்றும் கூறியுள்ளார். செனட் சபையிலும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடு குறித்த விவாதம் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புலனாய்வுத் துறையின் விசாரணை ஒரு புறம் இருக்க, ட்ரம்பின் நண்பனான ரஷ்யாவை, பாராளுமன்றத்தில் வறுத்தெடுக்க செனட்டர்களும் காத்திருக்கின்றனர்.

English summary
President Obama has ordered to investigate Russia's intervention in US Presidential election. It was alleged Russian intelligence agencies were behind hacking of electoral servers across US.It was also told Russian agencies were spreading false news thru social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X