For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரெடிட் கார்டில் பணமில்லை.. மனைவியிடம் கடன் வாங்கி ரெஸ்டாரண்ட் பில் கட்டிய ஒபாமா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஓபாமா , ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அதற்கான கட்டணத்தை கிரெடிட் கார்ட் மூலம் கட்ட முயன்றபோது கிரெடிட் கார்டில் பணம் இல்லை என்று காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூயார்க்கில் சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மிச்சேலுடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சாப்பிட சென்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அங்கு, வெண்ணையில் செய்யப்படும் இத்தாலி நாட்டு உணவான புர்ராட்டா, சல்சா வெர்தே , க்ரோகுயெட்டெஸ் எனப்படும் பொறிக்கப்பட்ட ரொட்டி போன்றவற்றை இருவரும் விரும்பி சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டு முடித்து வெயிட்டர் பில்லை கொடுத்ததும். ஒபாமா தனது கிரெடிட் கார்டை கேஷியரிடம் கொடுத்துள்ளார். காஷியர் அந்த கார்டை ஸ்வைப் செய்தபோது, பணமில்லை என்று கூறி கார்ட் ரிஜெக்ட் ஆகிவிட்டதாம்.

Obama's credit card declined at New York restaurant

இதனால் குழப்பமடைந்த ஒபாமா, என் கார்டின் பணத்தை யாராவது திருட்டுத்தனமாக எடுத்துவிட்டார்கள் போல என கேஷியரிடம் வேடிக்கையாக கூறியுள்ளார். இதன்பிறகு, மிச்சேல் தனது கிரெடிட் கார்டை எடுத்துக் கொடுத்துள்ளார். மிச்சேல் கார்டில் இருந்து ரெஸ்டாரண்ட் பணத்தை எடுத்துக்கொண்டது. இந்த சம்பவம் அமெரிக்க மீடியாக்களுக்கு கசிந்து தற்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் ஒபாமா கிரெடிட் கார்ட் அந்த நேரம் வேலை செய்யவில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், அதிபரிடமே பணமில்லையாமப்பா... என ஒபாமாவை ஓட்டி வருகின்றனர் உள்ளூர்வாசிகள்.

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது, என்னவென்றால், நம்மூரில் எம்.எல்.ஏ ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டாலே, அதை புனித செயலாக கருதி, அவரிடம் பணத்தை பெற மறுக்கும் ஹோட்டல்கள்தான் அதிகம். ஆனால் உலகின் பெரிய அண்ணனான அமெரிக்காவின் அதிபரிடம் பில்லுக்கு காசு கேட்டது மட்டுமின்றி, அதில் காசு இல்லை என்பதற்காக அவரது மனைவி கார்டை வாங்கி, பணத்தை எடுத்த அந்த ரெஸ்டாரண்ட் ஊழியர்களின் தொழில் பக்தியை பாராட்டியே தீர வேண்டும்.

English summary
President Obama had his credit card declined at a trendy New York restaurant during his visit for the United Nations General Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X